India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.09.2024 அன்று நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9499055924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா தொடங்கிவைத்தார். மாவட்டம் முழுவதும் 13 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மோட்டார் வாகன விபத்து, காசோலை மோசடி என 8040 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 15 கோடியே 93 லட்சத்து 36 ஆயிரத்து 737 ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்துக்கு இன்று 40வது பிறந்த நாள். மா, பலா, வாழை என முக்கனிகள் விளைந்து, முத்திரை பதிக்கும் திண்டுக்கல் மதுரை மாவட்டத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டை கிளவியாக இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து 1985ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பழனி முருகன் கோவிலை தன்னகத்தே கொண்ட மாவட்டம் திண்டுக்கல் என்பது கூடுதல் சிறப்பு.
திண்டுக்கல்லில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2022-23 கல்வியாண்டு முதல் தற்போதுவரை 44,307 மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார். அரசு பள்ளிகளில் தேர்ச்சிபெற்ற உயர் கல்வியில் சேராதவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்கள் உயர் கல்வியில் சேருவதற்காக உயர்வுக்குப்படி என்ற முகாம் துவக்கப்பட்டது. இதில் 948 மாணவர்கள் உயர் கல்வி பயின்றுவருகின்றனர் என்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வினை 16,915 பேர் எழுதிய நிலையில் 5778 பேர் எழுதவில்லை. விண்ணப்பத்திருந்த 22,693 பேரில் 16,915 தேர்வு எழுதினர். 5778 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையத்தில் கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார். சப் கலெக்டர் கிசான் குமார், பி.ஆர்.ஓ. நாக ராஜ பூபதி, தாசில்தார் ஜெயபிரகாஷ் உடனிருந்தனர்.
இந்திய விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் நடத்திய 2ம் கட்ட அஸ்மிதா டேக்வாண்டோ கேலோ இந்தியா பெண்களுக்கான லீக் போட்டி திண்டுக்கல்லில் நடந்தது. செப்.11 முதல் 14 வரை நடந்த போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என். கலை கல்லூரி மாணவி அனுஷியா பிரியதர்ஷினி 67 கிலோ எடைபிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இவர் தமிழக அரசின் எம்.ஐ.எம்.எஸ். திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பயிற்சி பெற்றுவருகிறார்.
திண்டுக்கல்லை சேர்ந்த மாணவர் ஜித்தன் அர்ஜுனன், தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா சார்பாக கலந்து கொண்டு நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றார். இவருக்கு நேற்று திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொழிலதிபர் சாதிக் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட அம்மையநாயக்கனூர் பேருந்து நிறுத்தத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு பிறகு, கோவிந்தாபுரம் மயானத்தில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அம்மையநாயக்கனூர் காவல்துறை உதவியுடன் உரிய மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது வரை டெங்கு காய்ச்சல் காரணமாக 12 குழந்தைகள் உட்பட 45 நபர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பலர் காய்ச்சல் என மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால், அனைத்து இடங்களிலும் நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல்: பள்ளிகட்டடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கலெக்டர் பூங்கொடி கேட்டு கொண்டார். அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள், அடிப்படை வசதி குறித்து குழு உறுப்பினர்கள் துறை சார்ந்து ஆய்வு செய்து
உடனடியாக நிறைவேற்றி அறிக்கை சமர்பிக்க வேண்டும். வகுப்றை, கட்டடத்தின் உறுதி குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தபட்டது.
Sorry, no posts matched your criteria.