India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் கவாலிகட்டி , தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் ஜரோன்தே விஷால் தஷ்ரத் , காவல்துறை பார்வையாளர் மனோஜ்குமார் கலந்து கொண்டனர்.
2024 மக்களவை தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, வாக்குச்சாவடி மையங்கள் அமையவுள்ள பள்ளிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர்கள் வடிவேல் முருகன் , வில்சன்தேவதாஸ் உட்பட தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணுப்படுகிறது. தொடர்ந்து காவடி மற்றும் வேல்களை தாங்கி வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் காங்கேயத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 20 அடி நீள அலகு குத்தி வந்ததால் பரபரப்பு நிலவியது.
பழனி அருகே உள்ள மானூர் பைபாஸ் சாலையில் நேற்று இரண்டு இருசக்கர வாகனங்கள்
நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இவ்விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலா தலத்திற்கு சென்ற தூத்துக்குடி இளைஞர் ஒருவர் பாறை பகுதியில் இருந்து சுற்றுலா தலத்தை எட்டிப்பார்த்த போது 100 அடி பள்ளத்தில் கால் தவறி விழுந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 100 அடி பள்ளத்தில் இறங்கி படுகாயங்களுடன் வலியில் தவித்து வந்த தன்ராஜ் (22) என்ற இளைஞரை உயிருடன் மீட்டு மேலே அழைத்து வந்தனர்.
திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் நேற்று திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம், வடமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்ற கண்ணன் (45), நாகராஜன் (42), மதுரைவீரன் (45), செல்வம் (35), தவமணி (48), வின்சென்ட் (45) உள்பட 27 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 375 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட பயிற்சி முகாம் ஏப்.1-ஆம் தேதி முதல் 12 வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஆதாா் அட்டை நகலுடன் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை (7401703504) தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இப்தார் விருந்து நேற்று மாலை நடைபெற்றது .
இதில் பழனி வணிகர் சங்க தலைவர் ஜே பி சரவணன், பொறுப்பாளர்கள் ஹரிஹர முத்து, கந்த விலாஸ் பாஸ்கரன், தவ்பிக், நிவாசுதீன் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .இதில் நோன்பு கஞ்சி, பழ ரசங்கள் மற்றும் பழ வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பீகார் மாநிலம் பாட்னாவில் பள்ளிகளுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டி வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம் பள்ளியில் பயிலும் மாணவன் ஜித்தின் அர்ஜுனன் 100 மீட்டர், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல்
ஆகிய 3 போட்டிகளிலும்
பங்குபெற உள்ளார். மாணவனை பள்ளி நிர்வாகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட 26 பேர் மனு தாக்கல் செய்தனர். இதன் பரிசீலனையில் 18 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. இதை தொடர்ந்து நேற்று மாலை 3:00 மணி வரை 3 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். இதன் மூலம் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் எண்ணிக்கை 15 ஆகக் குறைந்தது. நோட்டா சின்னத்தையும் சோ்த்துக் கொண்டால் மொத்தம் 16 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.