India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் அணைக்கட்டு பகுதிகளில் கட்டுப்பாட்டு அறை அமைத்து 24 மணி நேரமும் நீா்வரத்தை கண்காணிக்க வேண்டும். நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து வாய்க்கால்களை தூா்வார வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விவரங்களை உரிய படிவங்களில் தினமும் அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்..
பழனி பஞ்சாமிா்தத்தில் பயன்படுத்தப்படும் நெய் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. பழனி பஞ்சாமிா்தம் கெட்டுப்போனதாக பிரச்சனை எழுந்த கடந்த நவம்பா், டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எந்த நெய் பயன்படுத்தப்பட்டது என்றும் கோயில் நிா்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவா் கனகராஜ் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டார்.
திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் அனிதா தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பால் பொருட்கள் தயாரிப்பின்போது வெளியேறும் கழிவுநீர் மாதிரிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும், குறைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்னி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற ஏ.ஆர் ஃபுட்ஸ் நிறுவனம், பழனி முருகன் கோயிலுக்கு நெய் சப்ளை செய்கிறது என்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் பொய்யான செய்தி பழனி கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்து பெறப்படுகிறது என்று அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக சந்திரபாபு நாயுடு அரசு குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், திருப்பதி லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்யும் ஏ.ஆர். புட்ஸ் நிறுவனம்தான் பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்வதாக பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழநியில் பெருந்திட்டவரைவு பெயரில் 5 முக்கிய வீதிகள் அகற்றப்பட உள்ளதாக வெளியான வரைபடம் வைரலாகி வருகிறது. இதற்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. 5 வீதிகள் அகற்றப்பட உள்ளதாக வெளியான தகவல் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், கடைகள், மண்டப உரிமையாளர்கள் என 5000 குடும்பத்தினரை பீதியடையச் செய்துள்ளது.
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நேற்று வழங்கினார். கூட்டத்தில் மாதாந்திர உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பசுமைவீடு, வங்கி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 110 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27ஆயிரத்தில் 3 சக்கர நாற்காலிகளும், ஒருவருக்கு தையல் இயந்திரமும், 6 பேருக்கு தலா ரூ.500 மதிப்பிலான ஊன்றுகோல்களும் வழங்கப்பட்டன.
ஒட்டன்சத்திரத்தை அடுத்த பொட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள ஒடைப் பகுதியில் 17 மயில்கள் விஷம் கலந்த உணவைத் தின்ற நிலையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து கன்னிவாடி வனச்சரகா் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினா் விசாரித்தனா். இதில் நடுப்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயி முருகன் (50) உணவில் விஷம் கலந்துவைத்து மயில்களைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை வனத்துறையினா் நேற்று கைதுசெய்தனா்
பழனி பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி மைதானத்தில் கடந்த மாதம் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது. மாநாடு முடிந்து பந்தல்கள் அகற்றப்பட்ட நிலையில் மைதானத்தில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக குப்பைகளை அகற்றி மாணவர்கள் மைதானத்தை பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 246 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் 1,25,750 மாணவ-மாணவிகள் காலாண்டு தேர்வு எழுதுகின்றனர். 6ம் வகுப்பில் 14,735, 7ம் வகுப்பில் 16,550, 8ம் வகுப்பில் 17,549, 9ம் வகுப்பில் 21,646, 10 வகுப்பில் 21,072, 11ம் வகுப்பில் 17,237, 12ம் வகுப்பில் 16,961 பேர் தேர்வு எழுதுகின்றனர். இன்று 11, 12ம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
Sorry, no posts matched your criteria.