India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட தொழில் முனைவோர்களுக்கான கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முகாமில் 87 தொழில் முனைவோர்களுக்கு ரூ.42.72 கோடி கடன் உதவிகளை ஆட்சியர் வழங்கினார். உடன் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி மொட்டணம்பட்டி அருகே பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் சுற்றி திரிவதாக நேற்று தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் (24), மேட்டுப்பட்டியை சேர்ந்த 3 சிறார்கள் உட்பட 4 பேரை கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பொருளூர் ஊராட்சி & அதனை சுற்றியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு (Pacb A-1412) வங்கியில் விவசாயத்திற்கு பயனுள்ள பூச்சி மருந்து அடிக்கும் ட்ரோன் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தேவைப்படும் விவசாயிகள் பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை தொடர்பு கொள்ளலாம்.
திண்டுக்கல் அருகே ம.மு. கோவிலூர் அருகே காப்பிளியபட்டி டாஸ்மாக் பின்புறம் ஹேமதயாளன்(32) என்பவர் வெட்டிக்கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கொலை செய்யபட்ட ஹேமதயாளன்மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்கு உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து போலீசார் தூரித விசாரணையில் ஏதும் முன்பகை காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்கின்றனர்.
திண்டுக்கல் பகுதியில் நாளுக்கு நாள் கொலைகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் பகுதியில் வாலிபர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் ஓட ஓட கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வாலிபரை கொலை செய்த நபர்கள் யார் எதற்காக கொலை செய்தார்கள் என்ற கோணத்தில் திண்டுக்கல் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய பிரபல திரைப்பட இயக்குனர் மோகன் ஜி மீது, கோவில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குடோனில் பணியாற்றும் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், பழனி அடிவாரம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
பழனி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனிடையே பாஜக தொழிலாளர் அணி மாநில துணைத்தலைவர் செல்வகுமார் என்பவர் பஞ்சாமிர்தம் குறித்து அவதுாறு தகவல் பரப்பியதாக, அடிவாரம் போலீசில் பழனி கோயில் நிர்வாகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோரிக்கடவில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் மேயர் மருதராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர். மானூர், நரிக்கல்பட்டி மற்றும் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அண்ணா ஆட்சி காலம் பொற்காலம் என சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் சுயதொழில் துவங்கி, மானியம் பெற www.tnwidowwelfareboard.tn.gov.in இணையதளம் வாயிலாக 15.10.24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கோயில் நிர்வாகம் பாஜக நிர்வாகி மீது பழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் பேரில் இன்று பாஜக தொழில்பிரிவு துணைத் தலைவர் செல்வராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் செல்வராஜ்க்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.