India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்ததையொட்டி, கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அக்.20,21 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மக்களே SHARE பண்ணுங்க
திண்டுக்கல் மாவட்டம் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 5-8, 9-12, 13-16 என்ற மூன்று வகையான வயது பிரிவில் திண்டுக்கல் மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள் 20-10-2024 அன்று நடைபெறவுள்ளது. மேலும், விவரங்களுக்கு 0452-2566420, 9790070867 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
வேடசந்தூர் மற்றும் வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட வினோத் (எ) வினோத்குமார் (28), கவி (எ) கவியரசு (24), மாரிமுத்து (29), பகவதி (28), மதுமோகன் (26) சரவணக்குமார் (23), ஆகியோர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்தது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் 6 எதிரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை கண்ணன், DSP, DCB, திண்டுக்கல் தலைமையில் காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை 2023 ஆண்டு கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக நிலக்கோட்டை, மல்லனம்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார்(20) என்பவரை வத்தலகுண்டு போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்று விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண் குற்றவாளி விக்னேஷ்குமாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல் அருகே தேநீர் கடையில் வாங்கிய வடையில் பூரான் இருந்ததால் 3 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. பியூலா, அவரது தோழி அஸ்வதி உள்ளிட்ட 3 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேநீர் கடையில் இருந்த பொருட்களை மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வுக்கு கொண்டுச் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்குரிய தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 18.10.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை பவுல்ராஜ்
DSP, SJ & HR, தலைமையில் காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
பழனி அடுத்த புது ஆயக்குடி 13வது வார்டு பகுதியைச் சேர்ந்த கருப்பாத்தாள் என்ற பெண் 15/10/24 இன்று மழையில் வீடு இடிந்து விழுந்ததில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதை தொடர்ந்து ஆயக்குடி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கூக்கால் என்ற மலைக் கிராமத்தின் தெற்கு பகுதியில் உருவாகும் சிறு, சிறு ஓடைகள் ஒன்றாகி வடக்கு நோக்கி ஓடி, பழனி வட்டம், ஆண்டிப்பட்டி கிராமத்தில் சிற்றருவியாக விழும் குதிரையாற்றின் குறுக்காக கட்டப்பட்ட அணை தான் குதிரை ஆறு அணையாகும். பழனியில் உள்ள குதிரையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணை நிரம்புகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.