Dindigul

News October 19, 2024

தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு

image

திண்டுக்கல்லை சேர்ந்த ஜவுளி தொழில்முனைவோர், தொழிலாளர்கள், ஜவுளித்துறை மற்றும் அதன் முயற்சிகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல் துறை, அறை எண். 502, ஐந்தாம் தளம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 0421 – 2220095 வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என  ஆட்சியர் பூங்கொடி தகவளித்துள்ளார்.

News October 19, 2024

நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில்
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கான
நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்கள் பெறுதல் மற்றும்
உறுப்பினர் சேர்க்கை முகாம் திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 24.10.2024 அன்று 11 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது. சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் மேற்படி முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News October 19, 2024

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: 2 பேர் கைது

image

நிலக்கோட்டை பஸ்ஸ்டாண்ட் அருகே மணிகண்டபிரபு,  பிரேம்குமார் ஆகியோர் நகை அடகு கடை, தீபாவளி சீட்டு நடத்தி பலரிடம் 2021 – 2022ல் தீபாவளி சீட்டில், சீட்டு தொகையை வழங்காமல் தலைமறைவாகினர். இந்நிலையில் நேற்று நிலக்கோட்டை பஸ்ஸ்டாண்ட் அருகே இருவரும் இருப்பதை பார்த்த சிலர் பணத்தை கேட்டுள்ளனர். இருவரும் பணத்தை தர மறுக்கவே நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்ததில் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

News October 19, 2024

திண்டுக்கல்லுக்கு துணை முதல்வர் வருகை

image

திண்டுக்கல்லுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அக்-20, 21 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளார். இதையொட்டி நகரின் முக்கிய சாலைகளில் சுத்தப்படுத்துவது, கழிவுக் குழாய்களை தூர்வாருவது போன்ற பல்வேறு பணிகளில் நடைபெறுகிறது. மேலும், அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள், மற்ற துறை அதிகாரிகள், அலுவலர்கள் அக்-20, 21 விடுப்பு எடுக்காது பணியில் இருக்க வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 19, 2024

பட்டாசுகள் வெடித்து ஒருவர் உயிரிழப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், சாலை தெரு பகுதியை சேர்ந்த சாகுல்ஹமீது (48). இவர் வீட்டில் புகை பிடிக்கும் போது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேடசந்தூர் போலீசார் சாகுல்ஹமீதின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 19, 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து மானியக்கடன் பெற தாட்கோ மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயன்பெற http://newscheme.tahdco.com என்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) இணையதளத்தில் CM ARISE திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறலாம். 

News October 18, 2024

திண்டுக்கல் இன்றைய இரவு ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை ஆனந்தராஜ், DSP, AR, திண்டுக்கல் & மதுமதி DSP, கொடைக்கானல் S/D தலைமையில் காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News October 18, 2024

நட்சத்திர ஏரியை அழகுபடுத்தும் பணியாளர்கள்

image

கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் கரைகளை தூய்மைப்படுத்தும் பணியில் தற்போது நகராட்சி பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கடந்த ஒரு வாரமாக 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஏரியின் கரைப்பகுதிகளில் உள்ள குப்பைகள், தேவையற்ற செடிகள், கொடிகளை அகற்றி ஏரிக்கு அழகு சேர்க்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

News October 18, 2024

திண்டுக்கல்: திடீரென பற்றி எரிந்த ஜெனரேட்டர் 

image

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பஜார் தெருவில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தின் மாடியில் உள்ள ஜெனரேட்டர் இன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இந்நிலையில் நத்தம் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. .

News October 18, 2024

திண்டுக்கல்லில் ரூ.1.20 கோடி மோசடி: 5 பேர் மீது வழக்கு

image

திண்டுக்கல், கொடைக்கானலை சேர்ந்த பிருந்தா என்பவர் அண்ணாசாலை பகுதியில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார். இவருடன் பங்குதாரராக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜாசெல்வம், அவரது தம்பி ராஜாபிரசாத் உள்பட 5 பேர் போலி ஆவணங்கள் தயாரித்து, பிருந்தாவைப் போல் கையெழுத்திட்டு ரூ.1.20 கோடி மோசடி செய்துள்ளனர். பிருந்தா தொடர்ந்த வழக்கின் பேரில் மாவட்ட குற்றபிரிவு போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!