Dindigul

News April 25, 2024

வெளியானது தேர்வு முடிவுகள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தட்டச்சு தேர்வானது நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வினை எழுதினர். இதில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இருபிரிவுகளின் கீழ் நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று(ஏப்.24) வெயிடப்பட்டது.<> https://tndtegteonline. in/GTEOnline/ <<>>என்ற லிங்க் கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

News April 25, 2024

திண்டுக்கலின் அடையாளமான கோட்டை

image

திண்டுக்கல் மலைக்கோட்டை, சுமார் 290 அடி உயரம் கொண்ட இந்த மலைக்கோட்டை சுமார் 1210 அடி நீளமும், 900 அடி அகலமும் கொண்டது. இது புரட்சி காலகட்டத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர்களின் கட்டுப்பாட்டில் இருந்து, 1790 இல் இக்கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி 1860 வரை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கைதி அறைகள், ஆயுதக்கிடங்குகள்மற்றும் பீரங்கிகள் போன்றவையை இங்கு காணலாம்.

News April 25, 2024

கோடைக்கால குடிநீர் பந்தல்

image

திண்டுக்கல் நகரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஏப்.24) கோடை கால வெயிலின் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க திண்டுக்கல் வடக்கு காவல் துறையினரும் தனியார் மாத பத்திரிக்கை நிறுவனமும் இணைந்து ரவுண்ட் ரோடு பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளனர். துவக்க நாளான இன்று நீர்மோர், தர்பூசணி பழம், குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

News April 25, 2024

திண்டுக்கல்: லிப்ட் கொடுத்தவருக்கு கத்தி குத்து

image

கொடைக்கானல் பெருமாள்மலையை சேர்ந்தவர் முனியாண்டி. பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது சென்பகனூர் அருகே 3 இளைஞர்கள் பேருந்தை தவறவிட்டதாக கூறி லிப்ட் கேட்டுள்ளனர்.  பரிதாபப்பட்ட முனியாண்டி மூவரையும் ஏற்றி டோல்கேட் அருகே சென்ற போது தாங்கள் வைத்திருந்த கத்தியால் முனியாண்டியை தாக்கி வாகனத்தினை கடத்த முயன்றனர். விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.

News April 25, 2024

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி..!

image

திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள் மெயின்ரோடு , கோவிந்தாபுரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 3 கடைகளில் இருந்து 20 கிலோ குட்கா பறிமுதல் செய்து 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

News April 24, 2024

திண்டுக்கல்: கடும் வறட்சியால் விலை உயர்வு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் காசா, கல்லாமி , செந்தூரம், மல்கோவா, அல்போன்சா போன்ற மா ரகங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படுகின்றன. மாம்பழ சீசன் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி ஜூலை வரை நீடிக்கும். மழையின்மை , கடும் வறட்சி, பூக்கும் காலதாமதம் ஆகிய காரணங்களால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு கிலோ செந்தூரம் மாம்பழம் ரூ.100 முதல் ரூ.110விற்பனை செய்யப்படுகிறது.

News April 24, 2024

நத்தம் அருகே நீரில் மூழ்கி சிறுவன் பலி

image

நத்தம் அருகே வத்திபட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (13). வத்திப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளியின் இறுதித் தேர்வு முடிந்தது தனது அண்ணன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வத்திப்பட்டி அருகே உள்ள சொக்கன் ஆசாரி குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

News April 24, 2024

திண்டுக்கல்: 10 அடி நீள கருஞ்சாரை

image

பழனி அடிவாரத்தில் சேகர் என்பவர் வீட்டில் பாம்பு ஒன்று புகுந்தது. வீட்டில் இருந்தவர்கள் பயந்து வெளியே ஓடினர். உடனடியாக பாம்பு பிடிக்கும் நாகராஜ் என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற நாகராஜ் வீட்டிற்குள் இருந்த 10 அடி நீளம் கொண்ட கருஞ்சாரை பாம்பை உயிருடன் பிடித்தார். பின்னர்,  வனத்துறை உதவியுடன் அடர்ந்த காட்டுப்பகுதியில் விடப்பட்டது. 

News April 24, 2024

திண்டுக்கல்: கோர விபத்து: பலி

image

ஒட்டன்சத்திரம் அருகே சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது மினி லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் தும்மிச்சாம்பட்டி புதூரரை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் ஒட்டன்சத்திரம், பழனி தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 24, 2024

சுகாதாரமற்ற நிலையில் பேருந்து நிலையம்

image

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை புரிகின்றனர். பேருந்து நிலையத்தில் குப்பைகள் போடும் இடமானது பேருந்து நிலைய நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடம் சுகாதரமற்ற நிலையில் உள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.