Dindigul

News November 13, 2024

திண்டுக்கல்லில் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News November 13, 2024

திண்டுக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.மாநில வூசு போட்டி திண்டுக்கல் சாதனை
2.பெத்துபாறை வயல் பகுதியில் யானை உயிரிழப்பு
3. கொடைகானலில் திடீர் சோதனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
4.கொடைகானல் விடுதியில் உணவு உட்கொண்ட 70 பேருக்கு வாந்தி மயக்கம்
5.முத்துநாயக்கன்பட்டி: மக்கள் தொடர்பு முகாம்
6.மல்லிகைப்பூ விலை 1 கிலோ ரூ.2000

News November 13, 2024

சென்னை மருத்துவருக்கு கத்திக்குத்து சம்பவம் எதிரொலி!

image

சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து சம்பவம் எதிரொலி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் நகர் ASP.சிபின் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். ASP. சிபின் மருத்துவர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News November 13, 2024

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம்

image

திண்டுக்கல் மாவட்ட போலீசார் சமூக தளம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று முகநூல் பக்கத்தில் ‘செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள்! நமது அலட்சியம் பெரும் விபத்தை ஏற்படுத்தும்’ என பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

News November 13, 2024

ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா உட்பட 6 பேர் விடுதலை

image

தேனி, கைலாசநாதர் கோவில் பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் Ex.CM OPS தம்பி ஓ.ராஜா உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இவ்வழக்கு தொடர்புடைய ஓ.ராஜா உட்பட 6 பேரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதில், ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கில் 6 பேரும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

News November 13, 2024

ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

image

தேனி, கைலாசநாதர் கோவில் பூசாரி நாக முத்துவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் Ex.CM OPS தம்பி ஓ.ராஜா உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்க உள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய ஓ.ராஜா உட்பட 6 பேரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் தற்பொழுது ஆஜராகி உள்ளனர்.

News November 13, 2024

ஓபிஎஸ் தம்பி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு 

image

தேனி, பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த நாகமுத்து (22). இவர் கைலாசபட்டி கைலாசநாதர் கோவில் பூசாரி. 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 7ந்தேதி நாகமுத்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலர் ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பை இன்று திண்டுக்கல் நீதிமன்றம் வழங்கவுள்ளது.

News November 13, 2024

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் டாக்டர் அம்பேத்கர் விருது 2025ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்பட உள்ளது. அம்பேத்கர் விருது பெற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு வாழ்க்கை தரம் உயர பாடுபட்ட நபர்கள் நவ.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 13, 2024

ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பிரச்சாரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும் சுகாதாரம் பேணுதல் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாவட்டம், வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் நவம்பர் 12 முதல் 22ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

திண்டுக்கல்லில் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!