Dindigul

News November 15, 2024

திண்டுக்கல் அருகே நன்றி தெரிவித்த எம்.பி

image

திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியின் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் R.சச்சிதானந்தம் சாணார்பட்டி ஒன்றியம் நொச்சியோடைபட்டியில் வாக்களித்த வாக்காள பொதுமக்களுக்கு இன்று நன்றி தெரிவித்தார். உடன் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக பொருளாளர்-தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன், நத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் ஒன்றிய திமுக நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் இருந்தனர்.

News November 15, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் நாளை (16.11.24) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்குநகர், பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

News November 15, 2024

பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

image

பழனி தாடாகுளம் பாசனப்பரப்பான 844 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப்பரப்பு 6168 ஏக்கர் நிலங்களுக்கும் ஆக மொத்தம் 7012 ஏக்கர் பழையப் பாசன நிலங்களுக்கு முதல்போக பாசனத்திற்கு 15.11.2024 முதல் 15.03.2025 முடிய 120 நாட்களுக்கு, திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து நீரிழப்பு உட்பட 1464.56 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

News November 14, 2024

திண்டுக்கல்லில் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News November 14, 2024

திண்டுக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.திண்டுக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம்
2.திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
3.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
4.திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேவை பாதிப்பு இல்லை – டீன்
5.நாகல்நகர் சந்தை கட்டுமானபணி மேயர் ஆய்வு
6.வீரக்கல் கோயிலில் 18ஆம் நூற்றாண்டு செப்பேடுகள் கண்டெடுப்பு

News November 14, 2024

பலியர் இன மக்களுக்கு 11 வீடுகள்

image

திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர் ஊராட்சி, குளவி கரை பகுதியில் பலியர் இன மக்கள் வசிப்பதற்காக 11 வீடுகள் கட்டப்பட்டது. இந்த வீடுகளையும், ரெட்டியார்சத்திரம் வாஸ் இன்ஸ்டிடியூட் சார்பாக 7 லட்சம் மதிப்பில் சிறு மின்விசை தண்ணீர் தொட்டியையும் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய குழு தலைவர் சிவகுருசாமி திறந்து வைத்தார். உடன் ரெட்டியார்சத்திரம் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News November 14, 2024

பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

image

இன்றும், நாளையும் சுபமுகூர்த்த நாட்கள் என்பதாலும், பூக்களின் வரத்து குறைவாலும் நேற்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்து விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,850 முதல் ரூ.2,000 வரை விற்பனையாகிறது. இதேபோல் சம்பங்கி கிலோ ரூ.100, ரோஜாப்பூ ரூ.100, முல்லை பூ ரூ.650, ஜாதி பூ ரூ.500, கனகாம்பரம் ரூ.1,000, கோழிக்கொண்டை ரூ.70, செண்டுமல்லி ரூ.60-க்கு விற்பனையாகிறது.

News November 14, 2024

கொடை: இ-பாஸ் பெற QR Code

image

கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி மற்றும் கியூஆர் கோட்டினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகள் எளிதான முறையில் இ-பாஸ் பதிவு செய்யலாம் என திண்டுக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நாளை(15.11.24) நடைபெறுகிறது. கலெக்டர் அலுவலக வளா்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்துத் துறை முதன்மை அலுவலா்களும் பங்கேற்கின்றனா். இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பண்ணைக் கருவிகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப் புழு வளா்ப்பு, விவசாயக் கடன் தொடா்பான கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனு அளிக்கலாம்.

News November 14, 2024

திண்டுக்கல் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது காலை 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு லேசானது முதல் மிதமான மழை இருப்பதாக தெரிவித்துள்ளது. எனவே, திண்டுக்கல் மக்களே உங்கள் பகுதியில் மழை பெய்து இருந்தால் கீழே கமெண்ட் செய்யவும்.

error: Content is protected !!