Dindigul

News November 16, 2024

மேட்டுப்பட்டி கிராமத்தில் வளர்ச்சி பணிகள் துவக்கம்

image

ஒட்டன்சத்திரம் தொகுதி மேட்டுப்பட்டி கிராமத்தில், ரூ.40 இலட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணிகளை உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வின்போது தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், ஒன்றியக்குழு பெருந்தலைவர் சத்தியபுவனா இராஜேந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

News November 16, 2024

வீட்டின் மேற்கூரை விழுந்து தொழிலாளி பலி

image

திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல், சீலப்பாடி அணைப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னதேவர் மகன் போஸ்(54) கூலித் தொழிலாளி. இவர் தனது வீட்டின் திண்ணையில் கட்டிலில் படுத்திருந்தபோது, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பலியானார்.இது குறித்து தகவல் அறிந்த தாலுகா காவலர்கள் போஸ் உடலை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 16, 2024

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுரை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வை தினந்தோறும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று அவர்களது முகநூல் பக்கத்தில் சமூக வலைதளங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களின் கடவுச்சொற்களை (Password) கடினமானதாக வைத்துக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

News November 16, 2024

ஊடகவியலாளர்களுக்கு எம்.பி வாழ்த்து

image

திண்டுக்கல்: ஜனநாயகத்தின் 4-வது தூணாக கருதப்படுவது பத்திரிகை மற்றும் ஊடகத்துறை ஆகும். ஜனநாயகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கும் பத்திரிக்கை ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், ஆசிரியர்கள், அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஊடக ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் உங்களோடு துணை நிற்பேன் என எம்.பி சச்சிதானந்தம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News November 16, 2024

திண்டுக்கல் இன்றைய முக்கிய செய்திகள்

image

1.வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்- அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது. 2.திண்டுக்கல்லில் மாலை அணிந்து விரதத்தை துவக்கிய ஐயப்ப பக்தர்கள். 3.திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்த பக்தர்கள்.  4.சின்னாளப்பட்டி சித்திவிநாயகர் மணி மண்டபத்தில் மாலை போட்டு விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள். 5.அதிமுக நிர்வாகிகளுடன் ex. அமைச்சர் தங்கமணி ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

News November 16, 2024

இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

image

திண்டுக்கல்லில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள், ஆதார் எண் இணைப்பவர்கள், பெயர் நீக்கம், பெயர், வயது, பாலினம், கதவு எண், முகவரி முதலிய பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும், தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்கு தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

News November 16, 2024

திண்டுக்கல்லில் இன்று மின்தடை ரத்து

image

திண்டுக்கல்லில் இன்று( நவ.16) பல்வேறு பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருந்தது. இந்நிலையில், அந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அங்குநகர் துணை மின் நிலையில், ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையத்தில் நடைபெற இருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று ரத்து செய்யப்படுகிறது. மின்தடை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளனர். திண்டுக்கல் மக்களே இதை ஷேர் பண்ணுங்க.

News November 15, 2024

திண்டுக்கல்லில் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News November 15, 2024

திண்டுக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உணவு பாதுகாப்பு துறை திடீர் ஆய்வு
2.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்னாபிஷேக பூஜை விமர்சையாக நடைபெற்றது.
3.செங்கழாளி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்
4.திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
5.திண்டுக்கல்: தொடர் திருட்டு சிக்கிய திருடன்

News November 15, 2024

சாலையில் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்போம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இன்றைய பதிவில் ‘சாலையைக் கடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்’ என்ற வாசகம் அடங்கிய பதிவை பகிர்ந்துள்ளனர். செல்போன் பயன்படுத்தப்படும் போது ​​கவனச்சிதறல் காரணமாக விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்.

error: Content is protected !!