India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்லில் இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகின்றது.இம்முகாமில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுவாக வழங்கலாம் என திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி அழைப்பு விடுத்துள்ளார்.
➤திண்டுக்கல் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. ➤மாவட்ட கால்பந்து அலுவலகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பிற்பகல் 12 மணிக்கு விருது வழங்கல். ➤நாளை கன்னிவாடி பேரூராட்சி, பண்ணைப்பட்டி, கரும்பபட்டி, காரமடை, புதுப்பட்டி, சுரக்காப்பட்டி, டி.கோம்பை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி டு மாலை 4 மணிக்கு மின்தடை. ➤தண்டபாணி நிலையத்தில் நேற்று காலை முதல் கட்டண சீட்டு வழங்கவில்லை.
திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவல் அதிகாரிகளின் இரவு நேர ரோந்து விவரம் வெளியிடப்பட்டுள்ளன. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, வேடசந்தூர், கொடைக்கானல் போன்ற திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு இரவு நேர ரோந்து பணிக்காவல் அதிகாரிகளின் பெயர் விவரம் மற்றும் செல்போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளன.
1. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று அனைத்து வார்டுகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
2.வழக்கறிஞர் சங்கம் நாளை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்!
3.நத்தம் அருகே இரண்டு பைக்குகள் மோதல்
4.நத்தம் அருகே சிறுவனை கடத்தி சென்றவர் கைது
5.திண்டுக்கல்: தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் வரதராஜன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். முறையான விசாரணை செய்யாத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) வழக்கறிஞர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற இருப்பதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன், செயலாளர் கென்னடி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று இணையதளத்தில் பல போலியான முதலீடு செயலிகள் உள்ளன. அவற்றில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். (Investment Apps) குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் எடுக்கலாம் என்ற ஆசையை தூண்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 19 டூவீலர்கள் நவ.29ஆம் தேதி காலை 10:00 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் ஏல முன்பணத்தொகையாக ரூ.1,000 செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 97878 14425, 83000 02504 தொடர்புகொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (22.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.