Dindigul

News November 6, 2024

பழநி முருகன் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்

image

பழநி முருகன் கோயிலில் நவ.2 கந்த சஷ்டி விழா துவங்கியது. சூரசம்ஹாரம் நாளை (நவ.7) மாலை நடக்கும் நிலையில் காலை 11:00 மணி முதல் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அன்றிரவு நடக்கும் தங்கரத புறப்பாடும் நடைபெறாது. ஏழாம் நாளான நவ.8 திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சண்முகருக்கு, மாலையில் பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

News November 6, 2024

தாண்டிக்குடி மலைப்பகுதியில் நுாதனமாக திருடப்படும் ‘அவகடா’

image

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ‘அவகடா’ துவக்கத்தில் காபிக்கு மத்தியில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டது. இவற்றின் தேவை ஆண்டுதோறும் அதிகரிக்க விலையும் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைச்சல் வெகுவாக பாதித்தால் துவக்கத்திலே கிலோ ரூ.200 விற்றது. தற்போது ரூ.300 வரை விலை போகிறது. இதனால் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் அவகடா மரங்களில் உள்ள காய்களை நுாதனமாக திருடுகின்றனர்.

News November 6, 2024

திண்டுக்கல் – கோயம்புத்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

image

திண்டுக்கல் கோயமுத்தூர் இடையே முன்பதிவு இல்லாத மெமு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவையை நவம்பர் 30 வரை ரயில்வே நிர்வாகம் நீட்டித்துள்ளது. கோயமுத்தூர் to திண்டுக்கல் மெமு சிறப்பு ரயில் (06106) – காலை 9:35க்கு புறப்பட்டு மதியம் 1:30 மணிக்கு திண்டுக்கல் வந்து சேரும். திண்டுக்கல் to கோயம்புத்தூர் சிறப்பு ரயில் (06107) – மதியம் 2:00 க்கு புறப்பட்டு மாலை 5:50க்கு கோவை சென்றடையும்.

News November 6, 2024

தீபாவளி சிறப்பு பேருந்துகளால் ரூ.2.73 கோடி வசூல்

image

தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பஸ்கள் 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருந்தது. நவ.3 சிறப்பு பஸ்கள் மூலம் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1.12 கோடி, நவ.4 ரூ.1.61 கோடி என 2 நாளில் ரூ.2.73 கோடி வசூலானது. இந்த விடுமுறை நேரத்தில் சிறப்பு பஸ்களில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மண்டல போக்குவரத்து அலுவலகம் சார்பில் நன்றி தெரிவித்து சர்க்குலர் அனுப்பப்பட்டுள்ளது.

News November 5, 2024

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News November 5, 2024

வாழைமரத்தின் அடிப்பகுதியில் வாழைத்தார்!

image

வழக்கமாக மரத்தின் உச்சியில் தான் வாழைமரம் தார்போடும். ஒரு சில மரங்கள், மரத்தின் நடுவில் தார்போடும். ஆனால் வாழை மரத்தின் அடியில் தார் போட்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா? ஆம், பழனி அருகே ராமபட்டணம் புதூர் கிராமத்தில் ரகு என்பவரின் தோட்டத்தில் உள்ள வாழை மரத்தின் அடிப்பகுதியில் வாழைத்தார் முளைத்துள்ளது. அப்பகுதி மக்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.

News November 5, 2024

போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை மாற்றம்

image

திண்டுக்கல் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் விஜயகுமாரி. இந்நிலையில் இவர் திருச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி திருச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

News November 5, 2024

தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று “தேசிய வாக்காளர் தினம்-2025” ஐ முன்னிட்டு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இணையதளம் வாயிலாக தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான வினாடி-வினா போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News November 5, 2024

குழந்தையின் நுரையீரலில் இருந்த எல்.இ.டி. லைட் அகற்றம் 

image

திண்டுக்கல்லை சேர்ந்த 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்.இ.டி. லைட்டை வெற்றிகரமாக அகற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்தனர். பிராங்கோஸ்கோப்பி நுரையீரல் அகநோக்கி மூலம் குழந்தையின் இடது பக்க நுரையீரலில் சிக்கி இருந்த ரிமோட் கண்ட்ரோல் கார் எல்.இ.டி. லைட் அகற்றம் செய்யப்பட்டது.

News November 5, 2024

தேவையற்ற செயலிகளை பதிவிறக்க வேண்டாம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு தினந்தோறும் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று சமூக வலதளப் பக்கத்தில் இணையதளத்தை பயன்படுத்தும் போது வரும் தேவையற்ற செயலிகளை (Apps) பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அதன் மூலம் உங்கள் தகவல் திருடப்படலாம். குறித்த புகாருக்கு சைபர் குற்றவியல் உதவி வழி: 1930 இணையதளம்: www.cybercrime.gov.in புகார் தெரிவிக்கலாம்.