Dindigul

News December 17, 2024

மோசடியான வேலைவாய்ப்பு தளங்கள் எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (இணையத்தில் பல மோசடியான வேலைவாய்ப்பு தளங்கள் உள்ளன. எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் பணம் பறி பறிபோகலாம்) வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 17, 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான ”திருக்குறள்“ முதல்நிலைப் போட்டி தேர்வு சனிக்கிழமை அன்று திண்டுக்கல் எம்.வி.எம்.அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News December 17, 2024

நீங்களும் REPOTER ஆகலாம்

image

தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான WAY2NEWS-ல் நீங்களும் நிருபர் ஆகலாம். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிய பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை செய்தியாக பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். மேலும், விபரங்களுக்கு 96558-64426 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம். மேலும், whats’s app பண்ணலாம்.

News December 17, 2024

பருப்பு வடையில் இருந்த “பூரான்”

image

நிலக்கோட்டை அருகே அக்ரஹாரபட்டியை சேர்ந்த ஜெயபிரகாஷ் நிலக்கோட்டையில் ஒரு பருப்பு வடை மற்றும் உளுந்த வடைகளை வாங்கிச் சென்றுள்ளார். வீட்டில் அனைவருக்கும் உளுந்த வடையை கொடுத்துவிட்டு தான் ஆசையாக வாங்கிச் சென்ற பருப்பு வடையை எடுத்து சாப்பிடுவதற்காக பிய்த்து உள்ளார். அப்போது கருப்பு நிறத்தில் இறந்த குட்டி பூரான் ஒன்று வடையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

News December 17, 2024

ஆன்மீக சுற்றுலா பயணம் பழனியில் புறப்பட்டது

image

தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அறுபடை வீடுகளுக்கு ஆன்மீக சுற்றுலா பக்தர்களை இலவசமாக அழைத்துச் செல்லப்படுகிறது. 60 வயதிற்கு மேற்பட்டோர் செல்லும் இந்த ஆன்மீக பயணத்திற்கு திண்டுக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 4 மண்டலங்கள் 210 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இன்று காலை பழனியில் இருந்து அறுபடை வீடுகளுக்கு ஆன்மீகப் பயணம் துவங்கியது.

News December 17, 2024

சிறுவன் உட்பட இருவருக்கு டெங்கு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 13வயது சிறுவன் உட்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்த பருவமழையால் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், வத்தலக்குண்டு மற்றும் கோசுக்குறிச்சியை சேர்ந்த 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News December 17, 2024

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News December 16, 2024

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை 

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (தற்போது அனைத்து ஆறுகள், குளங்கள், ஏரிகளில் நீர் நிரம்பி உள்ளதால் அவற்றில் குளிக்கவோ ஆபத்தான முறையில் செல்பி எடுக்கவோ வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News December 16, 2024

திண்டுக்கல் காவல் ஆய்வாளர் இடமாற்றம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்து, தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். அதன்படி தேனி, பெரியகுளத்தில் பணியாற்றிய பாஸ்டின் தினகரன் திண்டுக்கல் மாவட்ட சிறப்புக் கிளை காவல் ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட சிறப்பு கிளை காவல் ஆய்வாளர் பாலகுரு தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News December 16, 2024

பருப்பு வடையில் இருந்த “பூரான்”

image

நிலக்கோட்டை-மதுரை சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் நேற்று, ஜெயபிரகாஷ் என்பவர் 4 உளுந்த வடை மற்றும் 3 பருப்பு வடை வாங்கியிருந்தார். பருப்பு வடை ஒன்றை பிரித்த போது, அதில் ஒரு இறந்த பூரான் காணப்பட்டது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!