Dindigul

News December 18, 2024

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் எண்கள் தினந்தோறும் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

News December 18, 2024

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுரை 

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று “முன்னால் செல்லும் வாகனத்திற்கு 10 மீட்டர் இடைவெளி விட்டு பின் தொடரவும்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக, சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 18, 2024

நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை

image

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் செந்தில்குமார் வீட்டில் இன்று வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சத்திரப்பட்டியில் உள்ள செந்தில்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் செங்கல் சூளை மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களை செந்தில்குமார் நடத்தி வருகிறார்.

News December 18, 2024

களம் இறங்கிய கலெக்டர்

image

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்திக்கோம்பை, அம்பிளிக்கை, மண்டவாடி உட்பட பல்வேறு கிராமங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்-2025-ஐ முன்னிட்டு விண்ணப்பங்கள் அளித்த மனுதாரர் வீடுகளுக்கு இன்று நேரடியாக சென்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி விசாரணை மேற்கொண்டார். உடன் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.

News December 18, 2024

வருமான வரித்துறையினர் சோதனை

image

திண்டுக்கல், சத்திரப்பட்டியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் செந்தில்குமார் என்பவரின் வீட்டில் இன்று காலை இரு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த சோதனை 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

News December 18, 2024

திண்டுக்கல் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு 

image

திண்டுக்கல் மாவட்ட சிறப்புகிளை S.B.இன்ஸ்பெக்டர் பாலகுரு தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பெரியகுளத்தில் பணியாற்றிய பாஸ்டின்தினகரன் திண்டுக்கல் மாவட்ட சிறப்புக் கிளை, S.B.இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

News December 18, 2024

திண்டுக்கல் சீனிவாசன் கண்டன அறிக்கை

image

திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூடத்திற்கு “பாரத ரத்னா எம்ஜிஆர்” நகர்மன்ற கூடம் என்ற பெயரை “கலைஞர் கருணாநிதி” பெயர் வைப்பதாக மாநகராட்சி மேயர், துணை மேயர், திமுக மாமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில் இதை கண்டித்து அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். 

News December 18, 2024

நீங்களும் REPOTER ஆகலாம்

image

தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான WAY2NEWS-ல் நீங்களும் நிருபர் ஆகலாம். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிய பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை செய்தியாக பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். மேலும், விபரங்களுக்கு 96558-64426 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம். மேலும், whats’s app பண்ணலாம்.

News December 18, 2024

திண்டுக்கல்: தேர்வு தேதி அறிவிப்பு

image

திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 12.12.2024 அன்று ஃபெஞ்சல் புயல் மழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு அன்று நடத்தப்பட இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு வருகின்ற 21.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என்று திண்டுக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

News December 17, 2024

திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்களின் விவரங்கள் 

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள், திண்டுக்கல் நகரம், திண்டுக்கல் ஊரகம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி,கொடைக்கானல், நிலக்கோட்டை, உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் செல்போன் நம்பர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!