India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மே முதல் வாரத்தில் வெப்ப அலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேசமயம் மே 5ம் தேதி முதல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதன்படி, ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற உள்மாவட்டங்களில் மே முதல் வார இறுதியில் இருந்து இரண்டாவது வாரம் வரை மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார்.
அரூர் தென்கரைக்கோட்டை பகுதியை சேர்ந்த அம்பிதுரை மனைவி அனிதா(38). இவர் நேற்று(ஏப்.25) தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் திரும்பவில்லை. அவரை தேடி கணவர் சென்றபோது
ரமேஷ் என்பவரின் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். வனவிலங்குகள் வருவதை தடுக்க அமைத்த மின்கம்பியை அனிதா தெரியாமல் மிதித்து உயிரிழந்து தெரிந்தது. புகாரின் பேரில் போலீசார் ரமேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.
பாலக்கோடு வட்டம், ஓசூர் நெடுஞ்சாலை சூடப்பட்டி கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆலமரத்தில் மர்ம நபர்கள் நேற்று(ஏப்.25) தீ வைத்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு குழாய் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.
கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே உள்ள புழுதியூர் வார சந்தையில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், நேற்று கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இங்கு மாடு ஒன்று குறைந்தபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 70 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின; நேற்று மட்டும் ரூ.43 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவிதுள்ளனர் .
தர்மபுரி: ரேக அள்ளி அண்ணாநகர் பகுதி சேர்ந்த எல்லம்மாள் 51. கடந்த 22ம் தேதி இரவு 10 மணிக்கு சாலை கடக்கும்போது பொம்மிடி பகுதியில் இருந்து வந்த மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த எல்லம்மாள் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகள் மகேஸ்வரி இன்று பொம்மிடி போலீசில் புகார் அளித்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள அதியமான் கோட்டையில் உள்ளது சென்றாய பெருமாள் கோவில். இக்கோவில் மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இக்கோவில் மண்டப விதானத்தில் அழகிய 13ஆம் நூற்றாண்டின் வண்ண ஓவியங்களும் அதன் விளக்க எழுத்துக்களும் உள்ளன. இது 500 படிகள் மற்றும் 48 தூண்கள் கொண்ட மலைக் கோவிலாகும். இக்கோவில் ஹொய்சாளர்கள் கட்டடக்கலையில் அமைந்திருப்பது சிறப்பானதாகும்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சி தொப்பூரில் செயல்பட்டு வந்த டெக்ஸ்டைல்ஸ் கடையில் பூட்டை உடைத்து நேற்று(ஏப்.23) இரவு ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள புடவைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள நகைக் கடை உட்பட 5 கடைகளில் கொள்ளையர்கள் கை வரிசை காட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு என் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டல் -2024 நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி துவங்கி வைத்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
தருமபுரி மாவட்டம் கோலம்பட்டியை சேர்ந்த செந்தில் குமார்(40) அசாமில் போலீசாக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் பாப்பநாயக்கன்வலசை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று(ஏப்.22) மாமனார் வீட்டுக்கு சென்ற செந்தில்குமார் மாமியாருடன் சண்டையிட்டு வீட்டை சேதப்படுத்தி உள்ளார். இது குறித்து அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று(ஏப்.22) அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. அதன்படி, முதலிடமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், 2வதாக தருமபுரி, திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.