India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று 29.01.2025 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S.மகேஸ்வரன், தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. 58 மனுக்கள் மீது விசாரிக்கப்பட்டு 54 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. புதிதாக 30 மனுக்கள் பெறப்பட்டன.
தமிழக வெற்றிக்கழகத்தின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். மாவட்டத் துணைத் தலைவர், துணை செயலாளர், பொருளாளர் ஆகியோரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், சிவாவுக்கு கட்சி நிர்வாகிகள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பி.பள்ளிப்பட்டி அருகே உள்ள அஜ்ஜம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (23). கட்டிட தொழிலாளி. இவர் தனது நண்பர் லோகேஷ்வரனுடன் நேற்று அரூர்-க்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது பூனையானூர் அருகே வந்த போது தனியார் பஸ், பைக்மீது மோதியது. இந்த விபத்தில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் லோகேஸ்வரன் படுகாயமடைந்தார். விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போதக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமர் இவரது மகன் ஜெயசங்கர் (17). இவரது நண்பர் அதே பகுதியை வல்லரசு (17). இருவரும் பைக்கில் நேற்று பையர்நத்தம் நோக்கி சென்றபோது அந்த வழியாக வந்த லாரி, பைக் மீது மோதியதில் ஜெய்சங்கர் உயிரிழந்தார். இதில், வல்லரசு காயமடைந்தார். இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷேர் செய்யவும்..
காரிமங்கலம் அருகே பைசுஅள்ளி சின்னபுதூரை சேர்ந்தவர் லோகேஷ்குமார். இவர் இருசக்கர வாகன மெக்கானிக்-ஆக உள்ளார். இவர் நேற்று மாலை காரிமங்கலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி பைக்கில் கெரகோடஅள்ளி பிரிவு சாலை அருகே சென்றபோது தர்மபுரியில் இருந்து வந்த சரக்கு வேன் பைக் மீது மோதியதில் லோகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஷேர் செய்யவும்..
தர்மபுரி மாவட்டத்தில் 2024 -2025 ஆம் ஆண்டிற்கு ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம், பிப்ரவரி 6,7 ஆகிய 2 நாட்கள் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடைபெறும். பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக காவல்துறையினர் நியமிக்கப்பட்டு பல்வேறு குற்றங்களைத் தடுப்பதற்காகவும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவும் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு ரோந்து பணிக்குச் செல்வதற்காக காவல்துறையினரை அமைத்து கண்காணித்து வருவதற்கு இன்று ( ஜனவரி 28 ) காவல்துறையினர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் ராகி சாகுபடி செய்த சிறு குறு விவசாயிகள் நேரடியாக ராகி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம். மேலும் ராகி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடந்தால், மண்டல மேலாளர்: 94439380003, அலுவலக: 04342-231345, விழிப்பு அலுவலர்: 044-26424560 ஆகியோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் வீட்டுப் பணியில் ஈடுபடும் பணியாளர்களை தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு ஏதுவாக தர்மபுரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் உரிய ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்..
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “நீர்நிலைப் பாதுகாவலர் விருது” இந்த ஆண்டிற்கான விருதுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 31.01.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விருதிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
Sorry, no posts matched your criteria.