Dharmapuri

News September 19, 2024

தருமபுரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை(செப் 20) காலை 10 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சி தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார். வேலை தேடுவோருக்கு இச்செய்தியை பகிரவும்

News September 19, 2024

தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை 60 ஏரிகளில் நிரப்பும் திட்டம்

image

தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை நீரேற்றம் மூலம் 60 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை ரூ.587 கோடியில் செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து நீரேற்றம் மூலம் சுமார் 60 ஏரிகளுக்கு தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த திட்டப்பணிகள் தொடங்கும்.

News September 18, 2024

தர்மபுரியில் சுட்டெரிக்கும் வெயில்

image

தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து வெப்பநிலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இன்று செப்டம்பர் 18 மாலை நிலவரப்படி 95 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. உங்க ஏரியால வெயில் எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 17, 2024

தர்மபுரியில் புத்தகத் திருவிழா

image

தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் ஆறாவது புத்தகத் திருவிழா-2024 தர்மபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் அக்டோபர் 04 தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் மாணவ மாணவிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தக பிரியர்களுக்கு பகிரவும்.

News September 17, 2024

முன்னாள் படை வீரர்கள் சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்கள் அவர்தம் சார்ந்தோர்கள் AMC படை பிரிவை சார்ந்தவர்களுக்கான (Unit Quota)AMC Center Colege lucknnow வில் (நவ-7 முதல் 14 வரை நடைபெற உள்ளது. இதில் சில பணியிடங்களுக்காக ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. தகுதி உள்ளவர்கள் ஆவணங்களை AMC படைப்பணி இணையதளம் udq2024@joinnamec.in என்ற இணையதளத்தில் செப்-15 முதல் அக் -15க்குள் அனுப்பி வைக்குமாறு ஆட்சியர் கூறியுளார்.

News September 17, 2024

தருமபுரியில் 2¾ லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை

image

தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் ஒன்றாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்றி மாதந்தோறும் ரூ.1,000 தகுதியுள்ள பெண்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 2 லட்சத்து 84 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.

News September 17, 2024

தருமபுரி SC/ST பிரிவு பெண்களுக்கு மானியத்தில் விற்பனை

image

தருமபுரி மாவட்டத்தில் 2024-25 ஆண்டில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட (ம) ஆதரவற்ற பெண்களுக்கு ஒரு பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் வீதம் 50% மானிய முறையில் ஊராட்சிக்கு 100 பயனாளிகள் வீதம் வழங்கப்படுகிறது. தேவையான ஆவணங்களுடன் 25.09.24 தேதி வரை சம்பந்தபட்ட மருந்தகங்களில் சமபிர்க்க வேண்டும், எனவும் மேலும் விபரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம் கால்நடை பராமரிப்பு துறை அணுகி பயன்பெறலாம்.

News September 16, 2024

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 398 மனுக்கள் பெறப்பட்டுள்ளது

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனு வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 398 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

News September 16, 2024

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் கருக்காக மனு

image

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மோகன் மேஸ்திரி காலனி பகுதியை சேர்ந்த முபாரக் ஷரிப் என்பவர் இன்று ஒரு புகாரை அளித்தார். புகாரில் பிடமனேரி பகுதியை சேர்ந்த சக்தி என்பவர் தன் காரை வாங்கி கொண்டு திரும்பி தரவில்லை என்றும் இது குறித்து 2 முறை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இன்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

News September 16, 2024

தர்மபுரியில் ஓணம் பண்டிகை கோலாகலம்

image

தர்மபுரி பகுதியில் உள்ள கேரள மக்களின் வீடுகளில் ஓணம் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி கேரள மக்கள் புத்தாடை அணிந்து அவரவர் வீடுகளில் சாமிக்கு பல்வேறு வகையான பழங்கள், உணவு வகைகள் படையலிட்டு வழிபட்டனர். பெண்கள் விதவிதமான பூக்களை கொண்டு அத்தப் பூ கோலமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

error: Content is protected !!