Dharmapuri

News February 6, 2025

தருமபுரி ஆட்சியர் தகவல்

image

தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 07.02.2025-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது என்று ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

News February 5, 2025

தருமபுரியில் போலி சித்த மருத்துவர் கைது

image

ஒட்டப்பட்டி பகுதி, வள்ளுவர் நகரில் தனியாக உள்ள ஒரு வீட்டில் பி.எஸ்.சி தாவரவியல் படித்துவிட்டு போலியாக சித்த மருத்துவ சான்றிதழ் வைத்துக் கொண்டு சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வந்த ரமேஷ் குமார் என்பவரை அதியமான் கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் மருந்து, மாத்திரைகள், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

News February 5, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

தருமபுரியில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் தருமபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

News February 5, 2025

தருமபுரி மாவட்ட ஆட்சியராக சதீஷ் பதவியேற்பு

image

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஈரோடு துணை ஆட்சியராக பதவி வகித்த சதீஷ் அவர்கள் இன்று (05.02.2025) முறையாக கையொப்பமிட்டு பதவியேற்றுக்கொண்டார். அப்போது ஏராளமான அலுவலர்கள் உடன் இருந்தனர். புதிதாக பதவி ஏற்று கொண்ட ஆட்சித் தலைவருக்கு அரசு அலுவலர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

News February 5, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க.<<>>

News February 5, 2025

கோவில் நிலத்தில் பெண் சடலம் மீட்பு

image

கெலமங்கலத்திலுள்ள தேன்கனிக்கோட்டை சாலையில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பசவேஸ்வர சுவாமி கோவில் மானிய நிலம் உள்ளது. அதிலுள்ள தென்னந்தோப்பை நேற்று தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர். அப்போது, அழுகிய நிலையில் பெண் ஒருவரின் கால் பகுதி மட்டும் வெளியே தெரிவதையும், உடல் பகுதி முழுவதும் மண்ணால் மூடியிருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 4, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

தருமபுரியில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் தருமபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

News February 4, 2025

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

இன்று பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தோழர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி – மொரப்பூர் ரெயில் இணைப்பு பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும், நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பன குறித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.

News February 4, 2025

தர்மபுரியில் பத்து நாட்களுக்கு இலவச பரிசோதனை அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டம், சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைசுஹள்ளியில் அமைந்துள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று (பிப் 4) சர்வதேச புற்றுநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை, வாய் புற்று நோய்க்கு இலவச பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியைஷேர் செய்யவும்.

News February 4, 2025

கியாஸ் வெடித்து ஒருவர் கவலைக்கிடம்

image

மாரண்டஅள்ளி அருகே சீறியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேசன் 52, இவர் சமைப்பதற்காக சிலிண்டர் அருகே சென்ற போது திடீரென வெடித்து சிதறியதில் அவர் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். வீட்டின் பெரும் பகுதியும் சேதம் அடைந்தது. படுகாயம் அடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!