India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அக்டோபர் 01 மாலை பருப்பு பாரம் ஏற்றுக் கொண்டு வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிங்காரவேலு என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இணைய வழி மோசடிகளை தடுக்க போலி செயலிகளை கண்டறிந்து அவற்றை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் இணைய வழி குற்றங்கள் அதிகரித்துள்ள சூழலில் ஒரு நாளில் சராசரியாக 2 முதல் 3 புகார்கள் வருகின்றன. இதன் அடிப்படையில் ஒரு மாதத்தில் 60 முதல் 75 புகார்கள் வரை வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கும் பணிகளை மேற்பார்வையிட்டு விரைந்து முடிப்பதற்கு மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்திற்கு பொறுப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் மா.பா .பாண்டியராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து 2024 ஆம் ஆண்டிற்கான புத்தகத் திருவிழாவினை மதுராபாய் திருமண மஹாலில் வருகின்ற 04.10.2024 முதல் 14.10.2024 வரை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் தருமபுரி தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் மரு.இரா.செந்தில், மாவட்ட நூலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான மணிமேகலை விருதினை தர்மபுரி மாவட்டம் அருர் பேரூராட்சி சார்ந்த
ஸ்ரீ விநாயகா மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் விருது மற்றும் ரூ.ஒரு லட்சத்திற்கான காசோலை பெற்றிருந்தனர். நேற்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து விருது மற்றும் ரூபாய் ஒரு இலட்சம் காசோலையினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, அரூர், பாலக்கோடு நல்லம்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அக்டோபர் 01 இன்று மாலை முதல் மிதமான மழை பொழிந்த வரும் சூழலில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உங்க ஏரியால மழையா? கமெண்ட்ல சொல்லுங்க.
தர்மபுரி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 01.1.2024 குள் 58 வயது நிரம்பியவர்கள் இதற்கான விண்ணப்பங்களை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் (அக்-31)-க்குள் அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற அக்-5 அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் 75க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 5000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளது. காலை 9மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ள மும்முகாமில் 8, 10, +2 டிப்ளமோ டிகிரி, ஐடிஐ என அனைத்து கல்வி தகுதி உடையவர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியான தகவலானது உங்களது பெயரில் COURIER வந்துள்ளது எனவும், சட்ட விரோத பொருட்கள் இருப்பதாகவும் வெளி மாநிலத்தில் இருந்து போலீஸ் பேசுவதாக கூறி உங்களை மிரட்டி உங்களிடம் பணம் பறிக்கலாம் என அழைப்புகள் வந்தால் வங்கி கணக்கு விவரம் மற்றும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம். மேலும் சைபர்கிரைம் ஹெல்ப்லைன் 1930எண்னையும் www.cybercrime.gov.in என்ற இணையத்திலும் புகார் அளிக்கலாம்.
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பின்தங்கிய தருமபுரி, மாவட்டத்தை வளமான மாவட்டமாக மாற்ற காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என 10 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதனை மேற்கொள்ள அக்.4ஆம் தேதி அரை நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்த பாமக அழைப்பு விடுத்துள்ளது. அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.