Dharmapuri

News October 3, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி வழங்கிய ஆட்சியர்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைரிடம் இன்று மனு அளித்த 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி, காதொலிக்கருவி மற்றும் ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News October 3, 2024

தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம்

image

தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 281 தபால் நிலையங்களில் இந்தியா போஸ்ட் பேமஸ் வங்கி மூலம் அஞ்சலகங்களில் ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த விபத்து காப்பீடு திட்டத்திற்கு ஆண்டிற்கு ரூ.520 செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News October 3, 2024

தருமபுரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

பாமக சார்பில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும், அதற்காக வணிகர்கள் கலந்து கொள்ளுமாறும் பாமக ஆதரவு கோரியது. இந்நிலையில், ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். கடைகளை நடத்துவதற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படுவோர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 3, 2024

மாற்றுத்திறனாளிகளின் குறைதீர்க்கும் முகாம்

image

மாற்றுத்திறனாளிகளின் குறைகளைக் களையும் பொருட்டு மாவட்டஆட்சியர் சாந்தி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 3, 2024

வானொலி நிலையத்திற்கு வருகை புரிந்த எம்எல்ஏ

image

அதியமான்கோட்டையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் நேற்று (அக்டோபர் 02) காந்தி ஜெயந்தி முன்னிட்டு கவிதைப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு தர்மபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். வானொலி நிலைய அலுவலர்கள் மற்றும் பாமக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News October 3, 2024

மாற்றுத்திறனாளிகளின் குறைதீர்க்கும் முகாம்

image

மாற்றுத்திறனாளிகளின் குறைகளையும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று 03/10/2024 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News October 2, 2024

வேலை வாய்ப்பு முகாமிற்கு பதிவு செய்ய அறிவுறுத்தல்

image

தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் துறையின் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் அக்.05 அன்று நடைபெறுகிறது. இந்த தனியார் துறை முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, dpijobfair2024@gmail.com மற்றும் 04342-296188 தொடர்பு கொள்ளலாம்.

News October 2, 2024

தர்மபுரி மாவட்டத்திற்கு இன்று பிறந்த நாள்

image

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்த தர்மபுரி, தர்மபுரி மாவட்டமாக 1965 ஆம் ஆண்டு அக்.02 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது. மாவட்டமாக உதயமாகி 60 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மாவட்டத்தில் ஒகேனக்கல், தீர்த்தமலை, வத்தல்மலை 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை கோவில், காலபைரவர் கோயில் மாவட்டத்தின் சிறப்புகளாக உள்ளது. உங்களுக்கு தர்மபுரி மாவட்டத்தில் பிடித்தவற்றை கமெண்ட்ல சொல்லுங்க.

News October 2, 2024

தர்மபுரியில் நாளை செல்போன் பழுது பார்த்தல் பயிற்சி

image

தர்மபுரி இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் நடத்தும் இலவச செல்போன் பழுது பார்த்தல் பயிற்சி அக்.3 நாளை முதல் நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சேர விருப்பமுடியவர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகம் தொழிலாளர் உதவி ஆணையம் அலுவலக வளாகத்தில் அசல் மற்றும் நகல் சான்றிதலுடன் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு: 04342 230511, 86676 79474.

News October 2, 2024

தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை

image

உங்கள் செல்போன் எண் சட்ட விரோத பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை நீங்கள் தொடர்பு கொண்டு உள்ளீர்கள். நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் போதைபொருள் உள்ளது. உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளோம் எனக்கூறி உங்களை மிரட்டி பணம் பறிக்கலாம். பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என தருமபுரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் கிரைம் உதவி எண்:1930

error: Content is protected !!