India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, அனுமந்தபுரம் அடுத்த சாவடியூர் கிராமத்தில், ஆண் சடலம் ஒன்று குப்பையில் புதைக்கப்பட்டிருந்தது. விசாரணையில், இறந்தவர் பாலக்கோடு பகுதியை சேர்ந்த மோகன்(38) என்றும், முன் விரோதம் காரணமாக சொந்த தம்பியான ரகு(35) அடித்துக் கொலை செய்து வீட்டின் அருகே குப்பையில் புதைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து இன்று(மே 29) காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி வட்டம் அனசாகரம் அடுத்த செங்குந்தர் நகர் கிராமத்தில் குடியிருப்பில் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு இருப்பதாக தீயணைப்பு துறைக்கு நேற்று(மே 28 ஆம் தேதி) தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி, பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தர்மபுரியில் உள்ள தொப்பையாறு அணை, சென்னை-கள்ளிக்கோட்டை ஏழாம் தேசிய நெடுஞ்சாலைக்கு கிழக்கே 8.கி.மீ தொலைவில் உள்ள உப்பாளம்மன் கோயிலருகே தொப்பையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை 1986 இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை 299 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. பாசனவசதிக்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் இந்த அணை கட்டப்பட்டது.
சாமியாபுரம் கூட் ரோடு, மஞ்சவாடி காளிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர், எஸ்.ஐ., நாகேந்திரன் ஆகியோர் அடங்கிய குழு, பெட்டிக்கடைகள் மளிகை கடைகளில் ஆய்வு செய்து ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு, ‘சீல்’ வைத்தனர். பின் கடைக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர்.
தருமபுரியை சேர்ந்த மை தர்மபுரி என்ற அமைப்பினர் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவது ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்வது, ஆதரவற்றவர்களை பாதுகாப்பது மற்றும் ரத்த தானம் என பல்வேறு நற்செயல்களை செய்து வருகின்றனர். அதேபோல் இன்று மை தர்மபுரி அமைப்பினர் மூன்று பேர் வேலூரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரத்தம் வழங்கி உள்ளனர்.
சாமியாபுரம் கூட் ரோடு, மஞ்சவாடி காளிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர், எஸ்.ஐ., நாகேந்திரன் ஆகியோர் அடங்கிய குழு, பெட்டிக்கடைகள் மளிகை கடைகளில் ஆய்வு செய்து ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு, ‘சீல்’ வைத்தனர். பின் கடைக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர்.
காரிமங்கலம் அருகே காமலாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்-காவியா தம்பதியினர். இவர்களது 2 வயது குழந்தை ஆதவன், நேற்று அப்பகுதியில் சாலையோரத்தில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த பைக் மோதியதில், பலத்த காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளித்த நிலையில், மேல் சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுலா தளமாக திகழ்ந்து வரும் வத்தல் மலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. வத்தல் மலையில், மழையின் காரணமாக நீர்வரத்து அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் மினி ஏற்காடு, ஊட்டி என தர்மபுரி மக்களால் சொல்லப்படும் வத்தல் மலையில் இன்று சுற்றுலா பயணிகள் ஏராளமான குவிந்து வருகின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வனச்சரகம் கூட்டாறு காப்புக்காட்டில் வனசரகர் பழனிவேல் தலைமையில் வனத்துறையினர் இன்றுரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கரியமலை (50)என்பவர் மானை வேட்டையாடி கறி வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில், அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். மேலும் தப்பி ஓடிய அறிவழகன், அமானுல்லா ஆகிய இருவரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் மக்காத மண்ணுக்கும், விவசாயத்திற்கு மாசு ஏற்படுத்தியும் பெரும் இடையூராக இருந்து வரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், பொ.மல்லாபுரம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், ரோட்டோர கடைகள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வந்த நிலையில், இன்று 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.