India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மக்களே, உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <

தருமபுரி மக்களே, பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

தருமபுரி உழவர் சந்தையின் இன்றைய (செப்.11) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.15, முருங்கைக்காய் ரூ.65, சுரைக்காய் ரூ.18, கேரட் ரூ.58, புடலங்காய் ரூ.20, பெரிய வெங்காயம் ரூ.28, பீர்க்கங்காய் ரூ.40, கத்தரிக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.10, பாகற்காய் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.27, பச்சை மிளகாய் ரூ.30, அவரைக்காய் ரூ.25, தேங்காய் ரூ 85, முட்டைக்கோஸ் ரூ 18 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தருமபுரி மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக இந்த <

சங்க காலத்தில் இன்றைய தருமபுரி மாவட்டம் தகடூர் என அழைக்கப்பட்டது. இதனை சேரர் மரபைச் சேர்ந்த அதியமான் நெடுமானஞ்சி ஆட்சி செய்து வந்தார். இவர் இறும்பொறையூர், ஆரைக்கால் என அழைக்கப்பட்ட இன்றைய நாமக்கல் பகுதியையும் ஒருசேர ஆண்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சாகாவரம் பெற நெல்லிக்கனியை ஒவைக்கு அளித்ததால், இவர் இன்றளவும் நினைவு கூறப்படுகிறார். இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராகவும் திகழ்கிறார். ஷேர் பண்ணுங்க!

தருமபுரி, ஊரக வளர்ச்சி & ஊரகத் துறை சார்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
▶️ஈப்பு ஓட்டுநர்-ரூ.19,500-ரூ.71,900
▶️பதிவறை எழுத்தாளர்- ரூ.15,900-ரூ.58,500
▶️அலுவலக உதவியாளர்-ரூ.15,700-ரூ.58100
▶️இரவு காவலர்-ரூ.15,700-ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
▶️கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
▶️விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்., 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. <
ஷேர் பண்ணுங்க!

தர்மபுரி, காரிமங்கலத்தில் அரசு பதிவு பெறாமல் இயங்கிவந்த 32 செங்கல் சூளைகளுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாடு புவியியல் & சுரங்கத்துறையின் இணையதளத்தில் செப்.,3-ம் தேதிக்குள் பதிவு செய்ய காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூளைகள் இணையதளத்தில் பதிவு செய்யாததால், மாவட்ட ஆட்சியர் சதீஷ் குமார் இந்த சூளைகளை சீல் வைக்க காரிமங்கலம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட தனியார் கல்லூரி மாணவி நர்மதா மாநில அளவில் மூன்றாம் இடமும், ரோஜா மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்தனர். சென்னையில் நடைபெற்ற விழாவில் சுகாதார துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.10) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்புஎண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பெறப்பட்ட மனுவின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும், இணைய வழி இ-பட்டாக்கள் குறித்தும் மற்றும் “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குனர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.