India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஊதியம் வழங்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் இன்று காலை 9 மணி முதல் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊதியம் கிடைத்த பிறகே பணிக்குத் திரும்புவோம் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <

தருமபுரியில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு செப்.18 முதல் கடகத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 7 நாட்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ், இலவச உணவுடன், ரூ.5,600 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கைலாஷ் குமார் தலைமையில், ஒட்டப்பட்டி, தொழில் மையம் மற்றும் அதியமான் கோட்டை பகுதிகளில் உள்ள துரித உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், காலாவதியான 2 கிலோ உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (செப்.16) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ தர்மபுரி நகராட்சி – பிபிசி திருமண மண்டபம்
✅ தர்மபுரி வட்டாரம் – புதிய பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், மண்டு வளாகம்
✅ பென்னாகரம் வட்டாரம் – VPRC கட்டிடம், ஜெலமாரம்பட்டி
✅ நல்லம்பள்ளி வட்டாரம் – PUMS, தின்னஹள்ளி பள்ளி வளாகம்
✅ ஏரியூர் வட்டாரம் – ராமசாமி பொன்னம்மாள் திருமண மண்டபம்
✅ ஏரியூர் வட்டாரம் – கெந்தனஹள்ளி சமுதாயக் கூடம் (SHARE IT)

தருமபுரியில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு, செப்டம்பர் 18 முதல் கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 7 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ், இலவச உணவு, சிற்றுண்டி வழங்கப்படுவதுடன், ரூ.5,600 ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

2025-ஆம் ஆண்டு தீபாவளி (அக்.20) முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக்கடைகள் அமைக்க விரும்புவோர் 10.10.25-க்குள் விண்ணப்பங்கள் https://www.tnesevai.tn.gov.in முகவரியில் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். வெடிபொருள் சட்டம், பாதுகாப்பு விதிமுறைகள், தீ தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் காரஓனியில் உள்ள உதிருமண மண்டபத்தில் நாளை (செ.16), தர்மபுரி அரிமா சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து மருத்துவ முகாம் நடைபெறவிருக்கிறது. இதில், இருதயம், சர்க்கரை நோய், எலும்பு மூட்டு தேய்மானம் பரிசோதை செய்யப்படும். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

தருமபுரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <

தர்மபுரி மாவட்டத்தில் நாளை (செப்.16) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ தர்மபுரி நகராட்சி – பிபிசி திருமண மண்டபம்
✅ தர்மபுரி வட்டாரம் – புதிய பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், மண்டு வளாகம்
✅ பென்னாகரம் வட்டாரம் – VPRC கட்டிடம், ஜெலமாரம்பட்டி
✅ நல்லம்பள்ளி வட்டாரம் – PUMS, தின்னஹள்ளி பள்ளி வளாகம்
✅ ஏரியூர் வட்டாரம் – ராமசாமி பொன்னம்மாள் திருமண மண்டபம்
✅ ஏரியூர் வட்டாரம் – கெந்தனஹள்ளி சமுதாயக் கூடம் (SHARE IT)
Sorry, no posts matched your criteria.