Dharmapuri

News December 1, 2024

புயல் காரணமாக தங்கள் குறைகளை 1077அழைக்கலாம் ஆட்சியர் சாந்தி அறிவிப்பு

image

அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டறை செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தங்கள் குறைகளை 1077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் நாளையும் நமது மாவட்டத்திற்கு கனமழை எதிர்பார்க்கப்படுவதால் விடுமுறை தினம் என்பதாலும் அத்தியாவசிய பணிகள் தவிர வேறு காரணங்களுக்காக வெளியில் செல்வதை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்ன மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்

News November 30, 2024

மின் தொடர்பான புகார்களுக்கான எண்கள்

image

மின் சேவைகள், மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ மின்கம்பங்கள் உடைந்து இருந்தாலோ சாய்ந்து இருந்தாலும் மற்றும் மின்தடை குறித்து புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 9498794987 தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு மின்வாரியம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

News November 30, 2024

தருமபுரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

image

ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக்கடக்க உள்ளது. தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இன்று மழை பெய்துவரும் நிலையில், தருமபுரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இரவு 7 மணிவரை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News November 30, 2024

தருமபுரியில் அதி கனமழைக்கான எச்சரிக்கை

image

புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் விடியவிடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தருமபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

News November 30, 2024

தர்மபுரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டு கொல்லப்படுகின்றனர்.

News November 30, 2024

2024-2025 ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது ஆட்சியர் அறிவிப்பு

image

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது 08.03.2025உலக மகளிர் தினவிழாவில் மாண்புமிகு தமிழகமுதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது விருதுகள் @(https://award.tn.gov.in) 18.11.2024-5இவ்விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.31.12.2024இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்

News November 29, 2024

சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி

image

தருமபுரி அருகே அலகட்டு கிராமத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் இரங்கலை தெரிவித்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் அறிவித்த ரூ.3 லட்சத்திற்கான காசோலையை முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி குழந்தையின் பெற்றோரிடம் வழங்கினார்.

News November 29, 2024

பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

image

தருமபுரி மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பாத்திமா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலை பயிர்களான வாழை, வெங்காயம், கத்திரிக்காய், வெண்டை, தக்காளி பயிர்களுக்கு பிரீமியம் செலுத்த  அடுத்த ஆண்டு ஜன.31 கடைசி நாளாகும் எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News November 29, 2024

தருமபுரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலையில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக டிச.1 ஆம் தேதி தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News November 28, 2024

இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பம்

image

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தருமபுரி மாவட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேற்று  தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!