India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனமழை எச்சரிக்கை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராமங்களும் வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகியவற்றின் திட்டப்பணிகள் அனைத்தும் விரைவு முடிக்குமாறு தருமபுரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தோட்டக்கலைத் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவினை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்கிட 20 % கூடுதல் மானியமாக ரூ.48,000 விசைகளை எடுக்கும் கருவி வாங்கிட கூடுதல் மானியமாக ரூ.25,200 வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பவர் டில்லர் வாங்கிட அதிகபட்சமாக ரூ.1,68,000 விசைகளை எடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ.88,200 வரை மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று தெரிவித்தார்.
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டம் ஒவ்வொரு மாதமும், ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக டிசம்பர் மாதத்திற்கான முகாம் பென்னாகரம் வட்டத்தில் வரும் டிச.18ஆம் தேதி அன்று காலை 9.00 மணி முதல் டிச.19ஆம் தேதி காலை 9.00 மணி வரை நடைபெற உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.
வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தருமபுரி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. அரூர், பொம்மிடி, கடத்தூர், மானியதஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, கோட்டப்பட்டி ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருகெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். உங்க ஏரியாவில் மழையா?
கலைஞர் கைவினைத் திட்ட மூலம் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி, ரூ.50,000 மானியம் 5 சதவீதம் வரை வட்டி மானியம், திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள், மேலும் கலைஞர் கைவினை திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் msmeonline.tn.gov.in இணையதளத்திற்கு செல்லவும் அல்லது மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
கலைஞர் கைவினைத் திட்ட மூலம் ரூபாய் மூன்று லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி, ரூபாய் 50000 மானியம் ஐந்து சதவீதம் வரை வட்டி மானியம், திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள், மேலும் கலைஞர் கைவினை திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர்msmeonline.tn.gov.in இணையதளத்திற்கு செல்லவும் அல்லது மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
2025-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கான தகுதியானவர்களை விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் இந்த தெரிவு நோக்கத்திற்காக செய்வதற்கான வடிவமைக்கப்பட்ட https://awards/tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே 15.12.2024 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.
மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கையுந்து பந்து போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் அரசு மேல்நிலைப்பள்ளி இராமியணஹள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளனர். அதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் கையுந்து பந்து போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.
தர்மபுரி மாவட்டம் இந்தியன் வங்கி ஊருக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து வழங்கும் சணல்பை தயாரித்தல் இலவச பயிற்சி வகுப்பு இன்று முதல் 13 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது . மேலும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் பின்புறம் உள்ள கட்டுமான சங்க அலுவலகம் அருகில் உள்ள ஆர்எஸ்இடி அலுவலகத்தை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.