India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி மாவட்டத்தில், TNPSC சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு இன்று (செப்.28) நடைபெறுகிறது. தேர்வு எழுத வருவோர், காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் வருவது கட்டாயம். செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு எழுத கருப்பு நிற மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெற்றிப் பெற வாழ்த்துகள்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வில், 20,109 பேர் எழுதவுள்ளதாக, மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில், 65 தேர்வு மையங்களில், 20,109 தேர்வர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்வெழுதவுள்ளனர். தேர்வினை கண்காணிக்க, 4 பறக்கும்படை அலுவலர்கள், 14 நடமாடும் குழுக்கள் மற்றும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆய்வு அலுவலர் வீதம், 65 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி மக்களே! வருகிற அக்.1ம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை அனைவருக்கும் SHARE செய்யுங்

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

தருமபுரி மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்க சான்றிதழ் வாங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. அங்கே காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்கறது பெரிய வேலையா இருக்கும். ஆனா, இப்போ tnreginet.gov.in இணையதளம் மூலமா வீட்டிலிருந்தே, மொபைல் போன்லயே சுலபமா வாங்கலாம். எந்த நேரத்திலும், எங்கே இருந்தும் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிங்கன்னும் தொடர்ச்சி வேண்டுமா SHARE பண்ணுங்க

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் நடக்க இருக்கிறது. நிகழ்வின் முடிவில், உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து தீர்வு காண மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <

இந்தியாவின் மிகப் பெரிய நீர் மின் உற்பத்தி நிறுவனமான NHPC-யில் காலியாக உள்ள 248பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடங்கியுள்ளது. ஜூனியர் பொறியாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன. என்ஜினீயரிங், டிப்ளமோ, ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,05,000 வரை.விருப்பமுள்ளவர்கள் அக்-1ஆம் தேதிக்குள் இந்த <

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே தாசரஅள்ளியைச் சேர்ந்த கோவிந்தன், நேற்று (செப்-26) காலை கடத்தூரிலிருந்து தர்மபுரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணியம்பாடி அருகே எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். அவரை மீட்டு கடத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கடத்தூர் காவல் ஆய்வாளர் வசந்தா இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.