Dharmapuri

News December 24, 2024

ஒரு மாதத்தில் 1500 பேருக்கு நாய் கடிக்கு சிகிச்சை

image

தருமபுரி மாவட்டத்தில் நாய் கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 10,000க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், மருத்துவக் கல்லூரி, பென்னாகரம் அரசு மருத்துவமனை, தாலுக்கா மருத்துவமனைகளில் கடந்த மாதத்தில் மட்டும் 1500 நபர்கள் நாய் கடித்ததாக சிகிச்சை பெற்றதாக மருத்துவ துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

News December 23, 2024

தருமபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27.12.2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம் ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News December 23, 2024

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்

image

தருமபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் MATHI (மதி) – திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட கணினிகள், அலுவலக உபகரணங்கள் (மற்றும்) மரச்சாமான்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்து 5 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை பயன்பாட்டில் இருந்து தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொருட்களை கழிவு நீக்கம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று தெரிவித்தார்.

News December 22, 2024

தர்மபுரி மாவட்டத்தில் 363 கோடி பயிர் கடன் தள்ளுபடி

image

தர்மபுரி மாவட்டத்தில் 363 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. சுமார் 1.12 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 40,000 விவசாயிகளின் நகை கடன், ரூபாய் 157 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். மேலும், சங்கங்களின் மூலம் சுமார் ரூபாய் 4,218 கோடியில் ரூ. 5 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் பயிர் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

News December 22, 2024

படை வீரர்களின் குடும்பத்தாருக்கு குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்த செய்தி குறிப்பில் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தாருக்கென நாளை (டிச 23) சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. எனவே முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தார்கள் ஏதேனும் புகார்கள் இருப்பின் அதனை குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுவாக கொடுத்து விரைவில் அதற்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 22, 2024

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 17,000 மாணவிகள் பயன் 

image

தர்மபுரியில் உள்ள கலை அறிவியல், பொறியியல், தொழில் படிப்பு, மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் சுமார் 17,000 மாணவிகள் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் பெற்று பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தினால் மாணவிகள் உயர் கல்வியில் சேரும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழ்புதல்வன் திட்டத்தில் 68 கல்லூரிகளில் பயலும் 6339 மாணவர்களும்,  நான் முதல்வன் திட்டத்தில் 58,676 மாணவர்களும் பயன் பெற்றுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

News December 21, 2024

1.30 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு

image

தருமபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதிகளில் கரும்பு தோட்டங்கள் ஈரப்பதத்துடன் இருப்பதால் அறுவடை நடைபெறவில்லை. எனவே, ஈரப்பதம் குறைந்தவுடன் அறுவடை பணி தொடங்கும். அதன் பின் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்கப்படும் என்றும்,  நடப்பாண்டில் 1.30 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News December 21, 2024

அரசுக்கு விவசாயிகளின் கோரிக்கைகள் அனுப்பப்படும் –  கலெக்டர்

image

தர்மபுரியில் மரவள்ளிக்கிழங்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்தல், சொட்டுநீர் பாசன வழி வழங்கும் உரங்களின் விலையினை கட்டுப்படுத்த தற்போது வழங்கப்படும் ரசாயன இனத்திலிருந்து உரங்கள் இனத்திற்கு மாற்றம் செய்தல் போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் பதிவு செய்தனர். இந்தக் கோரிக்கைகளை அரசிற்கு கருத்து உருவாக அனுப்பப்படும் என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி (டிச. 20) தெரிவித்துள்ளார்.

News December 21, 2024

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு

image

 தமிழ்நாடு அளவில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கடந்த அக்டோபர் மாதம் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு எழுதினர். இதன் முடிவில் 2024ம் ஆண்டு தர்மபுரி அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதற்கு கடின உழைப்பு நல்கி பயிற்றுவித்த தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும், முதன்மை கல்வி அலுவலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

News December 20, 2024

தமிழ் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பாராட்டு

image

பாப்பிரெட்டிப்பட்டி நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மாநில அளவிலான தமிழ் மொழி இலக்கிய திறனறிதல் தேர்வில் 11ஆம் வகுப்பு பயிலும் கீர்த்திகா, ஷாலினி, பிரதாப் ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.1500 தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராசு ஆசிரியர் செந்தில் உள்ளிட்டோர் பாராட்டினர்.

error: Content is protected !!