India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி, தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் .கவிதா, வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் .மலர்விழி வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் .அறிவழகன், அரசுத்துறை அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் பரவலாக நேற்று முழுவதும் ஆங்காங்கே சாரல் மழை மற்றும் கனமழை பெய்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, தருமபுரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு வெளியாகியுள்ளது. அதன்படி அரூர் 27 மிமீ, மருதிப்பட்டி 19.6 மிமீ, பாப்பிரெட்டிப்பட்டியில் 9.2 மிமீ, பென்னாகரம் 1 மிமீ, ஒகேனக்கல் 2.6 மிமீ, பாலக்கோடு 7 மிமீ, தீர்த்தமலை 6.4 மிமீ, என மழை பதிவாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் நடைபெறாதவாறு தடுக்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் அனைத்து கிராமங்களிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவதை முன்கூட்டியே கண்டறியப்பட்டு திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் இது குறித்து தகவலை 1098 தெரிவிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்.
தர்மபுரி மாவட்ட அதிமுக சார்பில் இன்று பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே காலை 10:30 மணிக்கு, அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதை அடுத்து இன்று நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது விஏஓ, இளநிலை உதவியாளர் வனக்காப்பாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த TNPSC-GROUP-IV தேர்வு 13.07.2025 அன்று நடத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று(டிச 27) முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் என ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்
தருமபுரியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். தருமபுரியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை கண்காணித்து தடுக்க வேண்டும். குழந்தைகளின் கல்வி முக்கியத்துவம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில், விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் போட்டி அறிவிப்பு. அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்திருக்க வேண்டும். விளைச்சலின் போது 50 சென்ட் நிலப் பரப்பில் வேளாண்மை அதிகாரிகளின் மேற்பார்வையில் அளவை கணக்கிடப்படும். மேலும் இது பற்றி தகவல் அறிய அருகில் உள்ள வட்டார வேளாண்மை நிலையத்தை பார்வையிட்டு பயன் பெறலாம்.
பஞ்சப்பள்ளி ஆற்றுப்பாலம் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக இருப்பதாக நேற்று இரவு பஞ்சப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாரண்டஅள்ளி காவல் ஆய்வாளர் சுப்ரமணி தலைமையிலான காவலர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர் டிராக்டர் ஓட்டுநர் ரகு என்பது தெரியவந்தது. மேலும் காவலர்களின் முதல் கட்ட விசாரணையில் இவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பானது தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை முதல் நடக்கவுள்ளது. இவ்வகுப்பானது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் நடைபெற உள்ளது. இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்துள்ள மோளையானூர் கிராமத்தில் தந்தை பெரியாருக்கு நினைவு நாள் அனுசரிப்பு இன்று நடைபெற்றது. இதில் திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு தந்தை பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Sorry, no posts matched your criteria.