Dharmapuri

News January 3, 2025

தருமபுரி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஜன.3) சமூக வலைதள பதிவில்,  பண பரிவர்தனைகளுக்கு public Wi-Fi பயன்படுத்துவதை தவிர்க்கவும், இரு அடுக்கு பாதுகாப்பு (two factor authentication) முறையை enable செய்யவும், auto connection முறையை off செய்யவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov in அல்லது 1930 என்ற எண்ணிற்கு புகைரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News January 3, 2025

தருமபுரி இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

விமானப்படையில் GB’Y’ (Med asst including pharmacist) பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்களுக்கு ராணுவ ஆட்சேர்ப்பு மையம் கொச்சியில் open recruitment rally நடைபெறவுள்ளது. இது 28.1.25 முதல் 06.2.25 வரை மகாராஜா காலேஜ் ஸ்டேடியம், கொச்சியில் நடைபெற உள்ளது. இதில்10, +2, டிப்ளமோ/BSC Phamacy படித்தவர்கள் medical assistant பணிக்கான முகாமில் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News January 3, 2025

வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளார் பட்டியல் பார்வையாளர் ஆனந்தகுமார் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்.சாந்தி முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல்-2025 வெளியிடுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (03.01.2025) நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

News January 3, 2025

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து புகார் அளிக்கலாம் 

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசு குறித்து குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை  கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1967,1800 425 5901,1077, 04342 233299-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க. 

News January 3, 2025

தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கல்

image

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, தமிழர் திருநாள் தைப்பொங்கல் 2025- ஐ தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,70,297 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் 761 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.

News January 3, 2025

நெல் பயிருக்கு காப்பீடு செய்ய 31ம் தேதி கடைசி நாள்

image

தர்மபுரி வேளாண் இணை இயக்குனர் மரிய ரவி ஜெயக்குமார் நேற்று (ஜன 02)வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடப்பாண்டு ராபி பருவத்தில் நெல் – 3 நவரை சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகள் தர்மபுரி, கிருஷ்ணாபுரம், நல்லம்பள்ளி, இண்டூர், காரிமங்கலம், வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் 1 ஏக்கருக்கு 556.26 ரூபாயை ஜனவரி 31ஆம் தேதிக்குள் செலுத்தி காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

பாலக்கோடு அடுத்த சின்னாறு அணையிலிருந்து நீர் திறப்பு

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம் சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2024-25 ஆம் (பசலி 1434) ஆண்டிற்கு விவசாய நிலம் பாசனத்திற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி மற்றும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் இன்று (ஜன 3)  விவசாயிகள் பாசனம் பெறும் வகையில் காலை 9.30 மணி தண்ணீர் திறந்து வைக்க உள்ளனர்.

News January 3, 2025

தருமபுரி மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தருமபுரி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை(ஜன 4) காலை 7 மணிக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து 15 கிலோமீட்டர், 20 கிலோ மீட்டர் சைக்கிள் பந்தயம் நடைபெறுகிறது. வெற்றி பெருபவர்களுக்கு முதல் பரிசு ரூ 5000, 2ஆம் பரிசு ரூ 3000, 3ஆம் பரிசு ரூ.2000 என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2025

தருமபுரியில் இந்த ரயில் நிற்காது

image

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் எண் 11021 மும்பை தாதர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் ஜன.7ஆம் தேதியன்று இரவு 21:30 மணிக்கு மும்பையில் புறப்பட்டு, SMVT பெங்களூரு, பையப்பனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம், குப்பம், ஜோலார்பேட்டை மற்றும் சேலம் வழியாக இயக்கப்படும். ஓசூர்(ஜனவரி 8) மற்றும் தருமபுரி(ஜனவரி 9) நிறுத்தங்கள் தவிர்க்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 2, 2025

அரூரை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு

image

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மோப்பிரிப்பட்டி-தொட்டம்பட்டியை இணைத்து, அரூா் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்தப்படும் என தருமபுரியில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, அரூரை நகராட்சியாக உருவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!