India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 2024/2025 ஆம் ஆண்டில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே தமிழ் பேச்சு ஆற்றலையும், பண்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஜனவரி 21, 22 அன்று தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என இன்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தையுடன் நிரந்தர அறுவை சிகிச்சை செய்திருந்தால் ரூ.50.000 டெபாசிட் பத்திரம் வழங்கப்படும் என்றும், இரு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ. 25,000 வீதம் ரூ.50,000 டெபாசிட் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட அலுவலக தொலைபேசி எண் 04342-233088க்கு தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
தருமபுரி மாவட்டத்தில் இன்று (ஜன.06) மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை மனுக்களாக வழங்கினர். இதில் மொத்தம் 388 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச வீட்டு மனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவுறுத்தி உள்ளார்.
தருமபுரியில் வரைவு வாக்காளர் பட்டியளை ஆட்சியர் சாந்தி வெளியிட்டார். இதில், பாலக்கோட்டில் 2,44,243 பேர், பெண்ணகரத்தில் 2,52,043 பேர், தருமபுரியில், 2,68,424 பேர், பாப்பிரெட்டிப்பட்டியில் 2,62,873 பேர், அரூரில் 2,50,334 பேர் என மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,43,962 ஆண் வாக்காளர்களும், 6,33,783 பெண் வாக்காளர்களும், 172 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தமாக 12,77,917 பேர் பட்டியலில் உள்ளனர்.
அண்ணா பிறந்த நாளையொட்டி இன்று ( ஜனவரி 5 ) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஆண்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் எம்.பி மணி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று (ஜன 4), 7 வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாற்றம் & துணை வட்ட வளர்ச்சி அலுவலர்களுக்கு பதிவு உயர்வு செய்து ஆட்சியர் சாந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி நல்லம்பள்ளி பிடிஓ அரூர் பிடிஓ- வாக பணி மாறுதலும், அரூர் பிடிஓ நல்லம்பள்ளி பிடிஓ- வாகவும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காரிமங்கலம் பிடிஓ மொரப்பூர் பிடிஓ- வாகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் போதக்காடு ஊராட்சியில் உள்ள மலை கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் நடந்து சென்று படித்து வருகின்றனர். இதனை அறிந்த தர்மபுரி ஆட்சியர் சாந்தி உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள், நேற்று காலை பழங்குடியின மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், அவர்களுக்கான வசதிகளை அமைத்து தர உறுதியளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நேற்று (ஜன.03) தீபா என்பவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார். ஊத்தங்கரை டிஎஸ்பி தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். கொலையாளிகள் என தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரை சேர்ந்த மித்துன் மற்றும் அவரது நண்பர் கவியரசுவை போலீஸார் கைது செய்துள்ளனர். தீபாவின் கணவர் இறந்த நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு நீர்வளத்துறையின் மூலம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட 6 அணைகளுக்கான “சிறந்த அணை பராமரிப்பு” விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று(ஜன 3) நடைபெற்றது. இந்த விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சிறந்த 6 அணைகளுக்கு விருதுகளை வழங்கினார். இதில், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணைக்கு 2019-2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த அணை பராமரிப்பு விருது வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அதன்படி 2024ஆம் ஆண்டில் எடுத்த நடவடிக்கையால் மாவட்டம் முழுவதும் 150 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த கடைகளுக்கு ரூ 25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராததும் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.