Dharmapuri

News October 4, 2025

தருமபுரி: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (அக்.3) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 3, 2025

தருமபுரியில் 4 ஆண்டுகளில் 93,379 பேர் பலன்

image

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்ட “கலைஞரின் வரும்முன் காப்போம்” திட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 104 முகாம்கள் நடத்தப்பட்டு, மொத்தம் 93,379 நபர்கள் மருத்துவப் பலன்களைப் பெற்றுள்ளனர். இந்த நிதியாண்டில் (2024-2025, மார்ச் 10 வரை) மட்டும் 32 முகாம்களில் 29,540 பேர் பயனடைந்தது திட்டத்தின் வீச்சைக் காட்டுகிறது.

News October 3, 2025

தருமபுரி: டிகிரி போதும்.. கனரா வங்கியில் செம வாய்ப்பு!

image

தருமபுரி மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 12-10-2025 ஆகும். SHARE பண்ணுங்க

News October 3, 2025

தர்மபுரி: பண்டிகைக்கு லீவு தரலையா?

image

தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் படி ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி போன்ற அரசு விடுமுறை தினங்களில் ஒவ்வொரு நிறுவனமும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். விடுமுறை தினத்தில் வேலை செய்தால் அதற்கு ஈடாக மாற்று தின விடுப்பு (அ) இரட்டிப்பு சம்பளம் தர வேண்டும். இவை தரவில்லை என்றாலோ (அ) சம்பளத்துடன் விடுப்பு தரவில்லை என்றாலோ மாவட்ட தொழிலாளர் நலவாரியத்தில் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News October 3, 2025

தர்மபுரி பாஜக புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

image

தருமபுரி மாவட்ட அளவில் அமைப்பு பணிகளின் 19 பாஜக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் பூத் கமிட்டி பொறுப்பாளராகவும், மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன் சக்தி கேந்திரம் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் உறுப்பினராகவும், மாவட்ட பொதுச்செயலாளர் பிரவீன் பக்க பொறுப்பாளராகவும் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சுரேஷ் பிஎல்ஏ 2 பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர்.

News October 3, 2025

தர்மபுரி: எடப்பாடி பழனிசாமிக்கு தவெக வரவேற்பு

image

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் இன்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்க்கொள்ள உள்ளார். இந்நிலையில் காரிமங்கலம் மேற்கு ஒன்றியம் தவெக ஒன்றிய இளைஞரணியினர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று விஜய் படத்துடன் பேனர் வைத்து உள்ளனர். கரூர் விவகாரத்தில் அதிமுக தவெகவுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், இந்த பேனர் தற்போது பேசு பொருளாகி உள்ளது.

News October 3, 2025

தர்மபுரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். (SHARE பண்ணுங்க)

News October 3, 2025

தர்மபுரி: குட்நியுஸ்! School Fees கட்ட தேவையில்லை

image

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் LKG- 8ம் வகுப்பு வரை இலவச கல்வி பெறும் RTE திட்டத்திற்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், RTE திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கல்வி கட்டணம் செலுத்தி இருந்தால் 7 நாட்களுக்குள் அதை திருப்பி அளிக்க வேண்டும். திருப்பி அளிக்கவில்லை என்றால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் (அ) 14417 தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.

News October 3, 2025

தர்மபுரி: 12th போதும்! மத்திய போலீசில் வேலை

image

மத்திய உள்துறையின் கீழ் உள்ள டில்லி போலீசில் 7565 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18-25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் வரும் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சென்னை, மதுரை, சேலம், கோவை, திருச்சி, வேலூர் போன்ற இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது.ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை உண்டு. ஷேர் பண்ணுங்க

News October 3, 2025

தர்மபுரி: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தர்மபுரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இப்ராஹிம் நேற்றுமுன் தினம் ATMல் பணம எடுக்க சென்ற போது பணம் வராததால் அருகில் இருப்பவர் தான் எடுத்து தருவதாக கூறி, கார்டை பெற்று அவரும் பணம் வரவில்லை என்று கார்டை மாற்றி கொடுத்துள்ளார். இதை அறிந்த இப்ராஹிம் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் மகாராஷ்டிராவை சேர்ந்த ஜாதவ் என தெரிய வந்தது. அவரிடம் இருந்து போலி ATM கார்டுகள் பறிமுதல் செய்யபட்டன.

error: Content is protected !!