India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சட்ட விரோத கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரஞ்சித், ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர்களை தருமபுரி மருத்துவத்துறை இணை இயக்குனர் குழுவினர் பிடித்து அவர்களிடம் இருந்து 4 பாலினம் கண்டறியும் ஸ்கேன் இயந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கர்ப்பிணிகளை அனுப்பி வைத்த பெரியாம்பட்டியை சேர்ந்த இடைத்தரகர் வனிதாவை இன்று காலை ஆத்தூர் சிறப்பு பிரிவு போலிசார் கைது செய்தனர்.
பாலக்கோடு அருகே மூங்கில்பட்டி கிராமத்தில் 1500 எம்எம் பிரதான குழாயில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணி நடைபெறுகிறது. இதனால், தருமபுரி மாவட்டத்தில் 68 ஊராட்சிகள், 4 பேரூராட்சிகளில் அதாவது பென்னாகரம் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகள், காரிமங்கலம் ஒன்றியத்தில் 26 ஊராட்சிகள், பாலக்கோடு ஒன்றியத்தில் 36 ஊராட்சிகளுக்கு அடுத்த 3 தினங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக்குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் இதில் கலந்துகொள்ளாலாம் எனக் கூறியுள்ளார்.
பென்னாகரம் வட்டம் ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி. படகில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். ஏரியூர் பகுதியில் இருந்து மேட்டூர் பகுதிக்கு செல்லும் தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த எல்லை பகுதி வசிக்கும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற ஜன.24 அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு. விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர் என ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார்.
அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, உலக தொழுநோய் எதிர்ப்பு தின இரு வார விழாவாக ஜனவரி 30 முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் ஜனவரி 30 அன்று நடத்த வேண்டும், தொழுநோய் பற்றி விழிப்புணர்வு உறுதிமொழி அலுவலர்களுக்கு தருமபுரி கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
தருமபுரி வேளாண்மை துணை இயக்குனர் அலுவலகத்தில் ஏற்றுமதி ஆலோசனை மையம் (AECC) செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் ஏற்றுமதி வாய்ப்புள்ள வேளாண் விலைப் பொருட்கள், வேளாண் சார்ந்த பொருட்கள் குறித்து தொகுத்து வழங்கப்படுகின்றது. இந்த வாய்ப்பினை விவசாயிகள், வேளாண்மை உற்பத்தியாளர்கள், வேளாண் வணிகர்கள், இலவச வழிகாட்டுதல் வழங்குவதை பயன்படுத்திக் கொள்ளுமாறு தருமபுரி கலெக்டர் சாந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக அரசு ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க ஆவணம் செய்யும் வகையில் புதிய தொழில் முனைவோர் மத்த தொழில் நிறுவனம் மேம்பாட்டு திட்டம்(NEEDS) என்ற மானியத்துடன் கூடிய திட்டத்தினை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தில் சுய தொழில் துவங்கி பயன்பெற விரும்புவோர் www.kviconline.gov.in மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம் என தருமபுரி கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி ஆட்சியர் சாந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஜன.23 மேற்கொள்ளப்பட உள்ளது என மின்வாரியத்தால் தெரிவித்துள்ளது. மேலும் பாலக்கோடு, மூங்கில்பட்டி அருகில் பிரதான 1500mm இரும்பு குடிநீர் குழாயில் குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணி மேற்கொள்ள இருப்பதால் ஜன.23-25 வரை மூன்று நாட்கள் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது’.
காரிமங்கலம் அருகே பூமாண்டள்ளி கிராமத்தில் நேற்று(ஜன.20) நாட்டுவெடி வெடித்து சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக தீவிர விசாரணை செய்த காரிமங்கலம் போலீசார், அதே பகுதியை சேர்ந்த தர்மன் மற்றும் அவரது மருமகன் கிருஷ்ணன் ஆகிய இருவர் சட்டவிரோதமாக நாட்டு வெடி தயாரித்து மொட்டை மாடி அறையில் வைத்திருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்து சிறுமி பலியானது தெரிந்தது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.