India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், தருமபுரி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், தனி வட்டாட்சியா் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் குறைதீர் முகாம்கள் இன்று நடத்தப்படவுள்ளன. குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் உள்ளிட்ட சேவைகளுக்கு மனு வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
தருமபுரியில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை (ஜன.26) ஊராட்சி தலைவர்கள் தலைமையில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்படும். மேலும், ஒப்புதல் தீர்மானங்களும் கொண்டு வரப்படும். இதனால் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
தர்மபுரி மாவாட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு மாணவர்கள், அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாடும் வகையில், கடந்த ஜன.17ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அவ்விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை (ஜன.25) அன்று பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. SHARE IT
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று (ஜன.24) காலை 10:00 மணி முதல் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த முகாமிற்கான 23 தனியார் நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
தருமபுரி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் விவசாயிகளை ஒன்றிணைத்து இயற்கை முறை வேளாண்மையில் அங்கக சான்றிதழ் பெற்று விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு சந்தைப்படுத்தும் பொருட்டு இயற்கை சந்தையானது நடத்தபடவுள்ளது. வரும் 26ம் தேதி முதல் இயற்கை சந்தை காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (ஜன.24) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. நிறுவனங்களின் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே இந்த வாய்ப்பை வேலைவாய்ப்பற்றோர் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
தர்மபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் விவசாயிகளை ஒன்றிணைத்து இயற்கை முறையில் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் 26ம் தேதி முதல் அமலுக்கு வரும். மேலும், இயற்கை சந்தை காலை 6 – 11 மணி வரை தர்மபுரி உழவர் சந்தையில் நடைபெறவுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
தர்மபுரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தர்மபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி 23 இரவு காவல் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தடங்கம் கிராமத்தில் கடந்த 22 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி பெறவில்லை என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு அனுமதி குறித்து தாபா சிவா மாவட்ட ஆட்சியரை சந்தித்தார். தாபா சிவா பேசும்போது ”மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று பிப்.மாத தொடக்கத்தில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக்குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளாலாம் எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.