India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயது உள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வரும் காலங்களில் ஆதார்தான் அனைத்திற்க்கும் தேவையாக இருக்கும். எனவே, உடனடியாக ஆதார் மையங்களுக்கு சென்று இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க.

நெய்வேலி நிலக்கரி நிலையத்தில் அப்ரெண்ட்ஸ் பணிக்கு 1,101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, பார்மசி, வணிகம், CS, நர்சிங் பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக ரூ.12,524 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <

இந்தியாவில் COTPA Act, 2003 என்ற சட்டத்தின்படி அரசு அலுவலகம், ஹோட்டல், பஸ் ஸ்டாப், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, தியேட்டர், பூங்கா, பொதுசாலையில் புகைப்பிடித்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சிகரெட் விற்றால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இனி பொது இடங்களில் புகைப்பிடிப்பவரை கண்டால் உங்கள் <

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

தருமபுரி மாவட்டத்தில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான UYEGP திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வங்கியில் ரூ.15 இலட்சம் வரை கடன் பெற்று 25% மானியம் ரூ.3.75 இலட்சம் வரை பெறலாம். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் www.msmeonline.tn.gov.in மூலம் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்தார். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

தருமபுரி மாவட்டத்தில் இன்று (அக்.9) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் திருமல்வாடி விபிஆர்சி கட்டிடம் பண்ணைக்குளம், நல்லம்பள்ளி புயுல்ஸ் பெத்ரஹள்ளி பள்ளி வளாகம், காரிமங்கலம் விபிஆர்சி கட்டிடம் மோதூர், அரூர் சக்தி முருகன் திருமண மண்டபம் தீர்த்தமலை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கணபதி நகரை சேர்ந்த தமிழின மக்கள் கட்சி நிறுவனர் சிவக்குமார் என்கின்ற தமிழன் கடந்த 16 ஆண்டுகளாக போக்சோ வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியாக இருக்கிறார். இந்நிலையில். தர்மபுரி தனிப்படை போலீஸ் நேற்று மாலை 4 மணிக்கு அவரை கைது செய்து பாலக்கோடு போலீசில் ஒப்படைத்தனர், இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைதீர் கூட்டம் வருகின்ற (அக்.10) வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.08) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. ராஜாசுந்தர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

தருமபுரி மாவட்ட தலைவர் சரவணன் ஒப்புதலின்படி விவசாய அணி மண்டல் தலைவர்கள் நியமனம்.இதில்
விவசாய அணி மண்டல் தலைவர்கள் முருகன், அண்ணாமலை, அரவிந்த், மணிகண்டன், தம்பிதுரை, ஜீவா, பெரியசாமி, கோவிந்தராஜ், முருகன், பரந்தாமன், ரமேஷ், செல்வம், ஆகியவர்களை நியமனம் செய்துள்ளனர். பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தர்மபுரி மாவட்டத் தலைவர் சரவணன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.