Dharmapuri

News November 13, 2024

தர்மபுரி ஆட்சியர் அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டம் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர் இடைநிலை செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் இடைநிலை மற்றும் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார். பயிற்சியில் சேர்வதற்கு என்ற www.tahdco.com என்ற இணையதளத்தை பதிவு செய்ய வேண்டும்

News November 13, 2024

கணக்காளர் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி கலெக்டர் தகவல்

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு தர்மபுரி தாட்கோ மாவட்ட மேலாளர் அவர்களை நேரில் அணுகுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி நவம்பர் 12 இன்று தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

கிணற்றில் விழுந்த சிறுத்தை தப்பியது எப்படி?

image

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் விழுந்து உறுமிக் கொண்டிருந்த சிறுத்தை, வனத்துறையினர் மீட்புப் பணியை தொடங்கும்போதே குதித்து ஓடியது. சிறுத்தை விளைநிலங்களில் உள்ள பயிர்களுக்குள் நுழைந்து வனத்தை நோக்கி ஓடியதால் அது வனத்துக்குள் சென்றது. மேலும், சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் வனத்துறை சார்பில் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

News November 12, 2024

மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவி வழங்கும் திட்டம்

image

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் 200W மின்சாரம் மூலம் இயங்கும் 2HP மோட்டார் கொண்ட புல் நறுக்கும் கருவி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 32 லட்சம் ஆகும். இதை பயன்படுத்தி பசுந்தீவனங்களை சிறு துண்டுகளாக நறுக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தில் குறைந்தபட்ச 2 கால்நடை அலகுகளும் 0.5ஏக்கர் நிலம் தீவன பயிர் வளர்க்க வைத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 12, 2024

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் 

image

2024ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களை பற்றி முழு விவரங்களுடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20/11/2024 அன்று அன்று விண்ணப்பிக்கலாம். மேலும் இவ்விருதுக்கான விண்ணப்பபடிவத்தை ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகம் சென்னை-05 (அ) சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 12, 2024

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஏலம்

image

தர்மபுரி மாவட்ட அலகில் வருவாய் அலுவலக மாவட்ட ஆட்சித் தலைவர் கட்டுப்பாட்டில் இருந்து வருவாய்த்துறையில் சேர்ந்த மூன்று அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு இன்று( நவ 12) 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது. மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைபுள்ளியை கோரலாம் என தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

மின் மோட்டார்களை மானியத்தில் வழங்கும் திட்டம் 

image

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவற்றை மானியத்தில் வழங்கும் திட்டத்தில், அலைபேசி வழியாக செயல்படுத்தும் mobile phone operate automatic pumpset controller remote motor ரூ.13.09 லட்சம் மதிப்பிலான 187 மின் மோட்டார்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News November 12, 2024

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 493 மனுக்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து நேற்று மனு வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 493 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News November 11, 2024

தர்மபுரி மக்களே ஏமாற வேண்டாம்!

image

தர்மபுரி மாவட்ட காவல்துறையினர், விசாரணை அமைப்புகளில் இருந்து பேசுவதாக உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என கூறிவரும் போலியான அழைப்புகளை நம்பி உங்கள் பணம் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம். மேலும், சைபர் கிரைம் புகார்களுக்கு 1930 என்ற எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனனர். 

News November 11, 2024

 சிப்காட் பூங்காவிற்கு இடங்கள் தேர்வு

image

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி அதகப்பாடி, தடங்கம், அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி கிராமங்களில் சிப்காட் தொழில் பூங்கா அமைகிறது. நில எடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு 1724 ஏக்கர் நிலம் சிப்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சிப்காட் தொழில் பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.14.08 கோடி செலவில் வழங்கியுள்ளது.