India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்டத்தை விரைவாகவும், முழுமையாகவும் செயல்படுத்தும் நோக்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இந்தப் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. ஆட்சியர் ரெ.சதீஸ் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
தருமபுரி மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
தருமபுரி மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<
தண்டகுப்பம் மற்றும் அரூர் நாற்றங்கால்களில் தேக்கு, மகாகனி, வேங்கை, ஈட்டி போன்ற உயர்தர மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சாமிபுரம் பகுதி விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலவசமாக மரக்கன்றுகளைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, வனவர் சந்திரசேகரை 9626934955 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தருமபுரியின் சிறப்பு உணவுகள் பெரும்பாலும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய சமையல் முறைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதில் நிப்பட் பெரிதும் பிரபலமானவை. அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, வறுத்த வேர்க்கடலை, கடலைப்பருப்பு, எள், சீரகம், மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது செரிமானத்திற்கும், உடல் வலிமைக்கும் உதவும் என்று கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக
S. பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புவனேஸ்வரி, அரூர் கிருஷ்ண லீலா, பென்னாகரம் செல்வமணி , மற்றும் பாலக்கோடு பாலசுந்தரம் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE IT
ஷாப்பிங் மால், திரையரங்கம், சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும்போது செல்போன் நம்பரை கேட்பது வழக்கம். நாமும் யோசிக்காமல் நம்பரை தருகிறோம். இதனால் தேவையில்லாத போன் கால், SPAM கால் வர வாய்ப்புள்ளது. Ministry of Consumer Affairs-2023 படி கட்டாயப்படுத்தி நம்பர் வாங்குவது குற்றம். மீறினால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரைக்காலம். எனவே நம்பர் தரவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஷேர் பண்ணுங்க.
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள 417 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 24- 42 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.48,480 -ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப கல்வி தகுதி வரைமுறை செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு (ம) விண்ணப்பிக்க <
பாப்பிரெட்டிப்பட்டி மஞ்சவாடி பகுதியைச் சேர்ந்த 48 வயது விவசாயி குப்புசாமி, டிவிஎஸ் எக்செல் வாகனத்தில் சென்றபோது, கார் மோதி படுகாயமடைந்தார். பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் ஜிஹெச்சிற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.