India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக M. ரவிச்சந்திரன்
நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி லதா, அரூர் ஜெய் கீர்த்தி, பென்னாகரம் செல்வமணி மற்றும் பாலக்கோடு வெங்கட்ராமன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த முகாம் தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபம், அரூர் பொன் கற்பகம் திருமண மண்டபம், இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் கூத்தப்பாடி பெரியார் திருமண மண்டபம், ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஜக்கம்பட்டி மற்றும் பாலக்கோடு சமுதாய கூடம் பாடி ஆகிய இடங்களில் நடைபெறும்.
கர்நாடகாவில் காவிரி ஆற்று படுகையில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தர்மபுரி மாவட்ட நிர்வாகம், காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5-வது நாளாக வினாடிக்கு 6,500 கனஅடியாக நீடிப்பதால், மாவட்ட ஆட்சியர் சதிஸ், நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு மட்டும் தடை விதித்துள்ளார். கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5-வது நாளாக வினாடிக்கு 6,500 கனஅடியாக நீடிப்பதால், மாவட்ட ஆட்சியர் சதிஸ், நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு மட்டும் தடை விதித்துள்ளார். கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க
TMB வங்கி புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி (ம) வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிளாஸ் ரூம் டிரெயினிங்கின் போது மாதம் ரூ.5000, இன்டெர்ன்ஷிப்பில் மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ. 72,000 சம்பளம் வழங்கப்படும். <
புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள். 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் (அ) 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர நல்ல வாய்ப்பு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பெண்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியின் போது மதிய உணவு, சிற்றுண்டி மற்றும் பயிற்சி முடிந்த பின்னர் சுயதொழில் தொடங்க வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். விருப்பமுள்ள பெண்கள் கலந்து கொள்ளலாம். தகவல்களுக்கு 04348-230511, 8667679474 எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க
தருமபுரி மாவட்ட தடகள சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டி வருகின்ற 24.08.2025 காலை 7.00 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர் வீராங்கனைகள் 19.09.2025 முதல் 21.09.2025 வரையில் செங்கல்பட்டில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர் என கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.