India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.24 கோடியில் நவீன அவசர சிகிச்சை சிறப்பு பிரிவு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் நாகவேந்தன் கூறியுள்ளார். விபத்துகளில் படுகாயம் அடைவோருக்கு தேவையான உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படும் எனவும் இந்த அவசர சிறப்பு சிகிச்சை பிரிவிற்கான பணிகள் இறுதிகட்ட நிலையில் உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்
இன்று தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. சோ. மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 73மனுக்கள் பெறப்பட்டு 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
பாப்பாரப்பட்டி போலீஸ் காலனியை சேர்ந்த மூர்த்தி, முரளி இருவரும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது. இதனை மாணவியின் அக்கா & அவரது கணவர் தட்டி கேட்டதால், அவர்கள் இருவரையும் மூர்த்தியும், முரளியும் தாக்கி உள்ளனர். இதுகுறித்து நேற்று பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மூர்த்தி, முரளி இருவரையும் காவலர்கள் கைது செய்தனர்.
தர்மபுரியில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பேரிளம்பெண்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளிய முறையில் பெற இணையதளத்தின் மூலமாகவும் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாகவும் தங்கள் விபரங்களை பதிவு செய்து உறுப்பினராகலாம். மேலும் www.tnwldowwlfarebord.tn.gov.in மூலம் உறுப்பினர்கள் உதவிகளை பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி (மற்றும்) மேம்பாட்டு கழகம் (தாட்கோ) முன்னெடுப்பாக டாக்டர் அம்பேத்கர் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி மையத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு 1 வருட கால UPSC தேர்வுக்கான முதல்நிலை பயிற்சி வழங்கவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தருமபுரி ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படும் நகர்ப்புற பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர் பணியிடத்திற்கு தருமபுரி நகர்ப்புற வாழ்வாதார மையம் மூலம் வெளிச்சந்தை அடிப்படையில் தற்காலிகமாக பணியில் ஈடுபடுத்துவதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் வருகின்ற 12.9.2024 அன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரிய ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால நுட்புணர்வுகள் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் தங்களது தகுதி சான்றிதழ்கள் ஓட்டுனர் உரிமைச் சான்று, அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். தொடர்புக்கு. 8925940856, 8925940858.
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட மாணவ மாணவியருக்கு அப்பாவு நகரில் உள்ள நகராட்சி துவக்க பள்ளியில் செப் 15 அன்று மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைப்பெற உள்ளது. கலை பண்பாட்டுத்துறை தமிழ்நாடு ஜவகர் மன்றத்தின் வாயிலாக 2024-2025 நிதியாண்டின் கலை போட்டிகள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் பங்குபெறலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் கி. சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பீன்ஸ் ஒரு கிலோ ₹106 ரூபாய் முதல் ₹120ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பீன்ஸ் வரத்து அதிகரிப்பு காரணமாக உழவர் சந்தையில் இன்று ஒரு கிலோ ₹96 ரூபாய் எனவும், வெளிமார்க்கெட்டில் ₹100 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.