India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் பாலின விகிதாச்சாரம் குறித்து அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சதீஸ், தலைமையில் நேற்று அக்.16 நடைபெற்றது. உடன் இணை இயக்குநர் (நலப்பணிகள்)சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், துணை இயக்குநர் (குடும்பநலம்) பாரதி, மற்றும் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரியில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம். அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

தருமபுரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை,விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் <

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு <

தருமபுரி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து <

பென்னாகரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு விபத்து அவசர பிரிவு கட்டிடம், ஏரியூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டிடங்கள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் போன்றவற்றை சட்டமன்றத்தில் (அக்.16) பெண்ணாகரம் எம்.எல்.ஏ ஜி.கே.மணி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.

தருமபுரி மாவட்டத்தில் மின்சார சட்டம் 2003-படி செயல்படும் “நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம்” உறுப்பினரின் பதவிக்காலம், இது கடந்த 6ம் தேதி அன்று முடிவடைந்தது. இதையடுத்து புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. நிதித்துறையில் 15-20 ஆண்டுகள் அனுபவமுள்ளவர்கள் தங்கள் சுயவிவரத்துடன் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு விரைவில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் ரெ.சதீஸ் நேற்று (அக்.16) அறிவித்துள்ளார்.

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பூமாண்டஹள்ளி ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா (PMGSY) திட்டத்தின் கீழ் மோதூர் முதல் மோதூர் காலனி வரை தார்சாலை அமைக்கப்பட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் (அக்.16) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வோத்தமன் உள்ளிட்ட, தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.16) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. ரவிச்சந்திரன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.