Dharmapuri

News September 20, 2024

வருவாய் துறையை சேர்ந்த 3 வாகனங்கள் ஏல அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்ட வருவாய் அலகின் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் வருவாய்த்துறையை சேர்ந்த கழிவுசெய்யப்பட்ட 3 அரசு வாகனங்களை (செப்-26 ) அன்று முற்பகல் 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலை புள்ளியை கோரலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

தர்மபுரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

image

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். அதன் படி இன்று வேலைவாய்ப்பு முகாம்வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் பள்ளிப்படிப்பு, டிப்ளமோ பட்டப்படிப்பு என தகுதியானவர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

தர்மபுரி மாலை நேர உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

image

தர்மபுரி மாலை நேர உழவர் சந்தை காய்கறி ஒரு கிலோ விலையின் படி தக்காளி 210,கத்தரிக்காய் 20,வெண்டை14, அவரை 20,கொத்த அவரை 20,மொச்சை அவரை60, முள்ளங்கி 15, முருங்கைக்காய் 50,பச்சை மிளகாய் 20, பாகல் 210, புடலங்காய் 14,பீர்க்கங்காய் 16,சுரக்காய் 10,பூசணி சர்க்கரை 20,சாம்பல் பூசணி 24,தேங்காய் ஒன்று 48, சின்ன வெங்காயம் 36, மரவள்ளி 28, காராமணி 60,வாழைக்காய் 8,வாழைத்தண்டு 10,வாழைப்பூ10 விலையில் விற்கப்பட்டது.

News September 19, 2024

தர்மபுரி அருகே ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை

image

பென்னாகரம் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி இன்று தர்மபுரியில் அரசு பஸ்ஸில் ஏறி சீட்டில் அமர்ந்தார். அப்போது அருகில் உட்கார்ந்த நபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மாணவி சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் வாலிபரை பிடித்து பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மோகன் 33 என தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

News September 19, 2024

தருமபுரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை(செப் 20) காலை 10 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சி தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார். வேலை தேடுவோருக்கு இச்செய்தியை பகிரவும்

News September 19, 2024

தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை 60 ஏரிகளில் நிரப்பும் திட்டம்

image

தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை நீரேற்றம் மூலம் 60 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை ரூ.587 கோடியில் செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து நீரேற்றம் மூலம் சுமார் 60 ஏரிகளுக்கு தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த திட்டப்பணிகள் தொடங்கும்.

News September 18, 2024

தர்மபுரியில் சுட்டெரிக்கும் வெயில்

image

தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து வெப்பநிலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இன்று செப்டம்பர் 18 மாலை நிலவரப்படி 95 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. உங்க ஏரியால வெயில் எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 17, 2024

தர்மபுரியில் புத்தகத் திருவிழா

image

தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் ஆறாவது புத்தகத் திருவிழா-2024 தர்மபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் அக்டோபர் 04 தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் மாணவ மாணவிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தக பிரியர்களுக்கு பகிரவும்.

News September 17, 2024

முன்னாள் படை வீரர்கள் சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்கள் அவர்தம் சார்ந்தோர்கள் AMC படை பிரிவை சார்ந்தவர்களுக்கான (Unit Quota)AMC Center Colege lucknnow வில் (நவ-7 முதல் 14 வரை நடைபெற உள்ளது. இதில் சில பணியிடங்களுக்காக ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. தகுதி உள்ளவர்கள் ஆவணங்களை AMC படைப்பணி இணையதளம் udq2024@joinnamec.in என்ற இணையதளத்தில் செப்-15 முதல் அக் -15க்குள் அனுப்பி வைக்குமாறு ஆட்சியர் கூறியுளார்.

News September 17, 2024

தருமபுரியில் 2¾ லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை

image

தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் ஒன்றாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்றி மாதந்தோறும் ரூ.1,000 தகுதியுள்ள பெண்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 2 லட்சத்து 84 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.