Dharmapuri

News September 28, 2024

பொம்மிடியில் ரூ.15 கோடியில் மேம்பாட்டு பணிகள்

image

தருமபுரியில் மிகப்பழமையான ரயில் நிலையமான பொம்மிடி ரயில் நிலையம் 1867ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த ரெயில் நிலையத்தை புது பொலிவுடன் மேம்படுத்தும் பணிகள் ரூ.15 கோடியே 18 லட்சம் மதிப்பில் தொடங்கி நடந்து வருகிறது. இதில், பயணிகள் காத்திருப்பு கூடம், 2000 பேர் நின்று ஏறக்கூடிய வகையில் நடை மேடைகள் தங்கும் விடுதி, உணவு விடுதிகள் அமைய உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 28, 2024

தர்மபுரியில் கடை அடைப்பு அறிவிப்பு

image

தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த கோரி வரும் அக்டோபர் 4 ஆம் தேதி காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மனி வரை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதேசமயம் பென்னாகரத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்க பெருமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக கௌரவ தலைவருமான ஜி.கே.மணி அழைப்பு விடுத்துள்ளார்.

News September 27, 2024

தருமபுரி கலெக்டர் அறிவுறுத்தல்

image

தர்மபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தியையும் வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் அனைத்து நில அலுவலர்களுக்கும் மற்றும் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க பெறுவதை உறுதி செய்யப்பட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

News September 27, 2024

சிறுமி பாலியல் பலாத்காரம்: பூ வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை

image

தர்மபுரி பகுதியை சேர்ந்த பூ வியாபாரி பெரியசாமி(31). இவர் 12 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை அறிந்த பெற்றோர் தர்மபுரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சிவஞானம் குற்றவாளி பெரியசாமிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை & 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்‌.

News September 27, 2024

முன்னாள் அமைச்சரை சந்தித்த திமுக மா. செயலாளர்

image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 வது நாள் சிறையில் இருந்து நேற்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் அவரை சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்வில் கட்சியினர் பலரும் உடன் இருந்தனர்.

News September 27, 2024

மாநில அளவிலான போட்டிக்கு 718 தேர்வு

image

தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் நிறைவு பெற்றது. இந்நிலையில், போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து 718 வீரர் வீராங்கனைகள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர் என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News September 27, 2024

வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது

image

ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்குமார், வனக்காப்பாளர் ரவிக்குமார், காளிமுத்து, வனக்குழுவினர் மற்றும் ஒகேனக்கல் உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் குழுவினர் நேற்று ஒகேனக்கல் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த அரண்மனை பள்ளம் பகுதியை சேர்ந்த வடிவேல், காளிமுத்து ஆகிய இருவரை காவலர்கள் கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 27, 2024

தருமபுரியில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்

image

தமிழ்நாட்டில் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமிகளுக்கு குழந்தை திருமணங்கள் நடக்கும் மாவட்டங்களில் ஒன்றாக தர்மபுரி உள்ளது. மேலும், 1 ஆண்டில் குறைந்தபட்சம் 50 குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இது தொடர்பாக நடப்பாண்டில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே குழந்தை திருமணங்களை தடுக்க கிராமப்புற அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டு உள்ளது.

News September 26, 2024

தர்மபுரி திமுக மாவட்ட செயலாளர் அழைப்பு

image

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் திமுக பவள விழா அக்டோபர் 03 தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. அது சமயம் தருமபுரி மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில,மாவட்ட, ஒன்றிய,பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திமுக மா.செ.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

News September 26, 2024

குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுகூட்டம் மாவட்ட ஆட்சியர், கி.சாந்தி இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஸ்ரீதர், இளைஞர் நீதிபதிக்கும் முதன்மை நடுவர், எழிலரசி, இளைஞர் நீதிக்கும் உறுப்பினர் திரு.சரவணன், குழந்தை நலக்குழுஉறுப்பினர், பிரமிளா, மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.