Dharmapuri

News September 30, 2024

விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தருமபுரி புத்தகத் திருவிழா தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று (30.9.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் தகடூர் புத்தக பேரவை நிர்வாகிகள் டாக்டர் ஆர் செந்தில், சிசுபாலன் ஆகியோர் உள்ளனர்.

News September 30, 2024

தர்மபுரியில் மழையின் அளவு குறைவு: வானிலை மையம் தகவல்

image

தமிழக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பை விட 19 சதவீதம் அதிகமாக மழை பொழிந்திருந்தாலும் தர்மபுரி மாவட்டம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் இயல்பை விட மழையின் அளவு குறைந்து பதிவாகி உள்ளது. மேலும் காற்று திசை மாறுபட்டு வடகிழக்கு திசையில் இருந்து வீச தொடங்கி இருப்பதால் விரைவில் பருவ மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

News September 30, 2024

தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக்கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் அதற்கான உரிமம் பெற அக் 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான உரிமம் பெற https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். உரிமக் கட்டணமாக ரூ.600 அரசுக் கணக்கில் செலுத்தி அதற்கான அசல் சலான் ரூ.500 தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புக்கு கட்டணம் செலுத்த வேண்டும் .

News September 30, 2024

செந்தில் பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்து தர்மபுரி எம்பி மணி

image

சென்னையில் நேற்று புதிய அமைச்சர்களாக பொறுப்பு ஏற்ற அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சேலம்.ராஜேந்திரன்,
கோ.வி.செழியன் ஆகியோரை தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான
பழனியப்பன், தருமபுரி எம்பி மணி ஆகியோர் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இதில் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News September 30, 2024

சுற்றுலா துறை அமைச்சருக்கு தர்மபுரி எம்பி வாழ்த்து

image

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சராக ராஜ்பவனில் ராஜேந்திரன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, கிழக்கு திமுக மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் ஆகியோர் நேரில் சென்று அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

News September 29, 2024

இரட்டை கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிக்கு கால் முறிவு 

image

தருமபுரி மாவட்ட தனிப்படை போலீசார் இரட்டை கொலை செய்த தேவராஜ், அஷ்வின் உட்பட 7 பேரை கைது செய்து 4 பேரை காவல்துறையினர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தேனி மாவட்டத்தை சேர்ந்த தேவராஜை கைது செய்ய முயன்ற போது தப்பித்து ஓட முயற்சி செய்ததில் தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

News September 29, 2024

தருமபுரி கொலை குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

image

மேல் எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார், பெருமாள், வெங்கடாஜலம், ஆகியோருக்கு இடையே நிலப்பிரச்சனை இருந்தது. இந்நிலையில், பெருமாள், வெங்கடாஜலம், ஆகியோரை ராஜ்குமார் மரக்கட்டையால் தாக்கியதில் சிசிக்சை பெற்று வந்த, வெங்கடாஜலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்கில் குற்றவாளி ராஜ்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

News September 28, 2024

தர்மபுரியில் திருட்டில் ஈடுபட்ட காவலர் கைது

image

குத்தலஅல்லியைச் சேர்ந்த காவலர் சக்தி இவருக்கு வயது 30. விடுமுறையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட செல்லியம்பட்டி வந்தபோது வீடு புகுந்து கொள்ளை முயற்சி செய்ததை அடுத்து பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்று, கைதான சிறைக் காவலர் இன்று செப்டம்பர் 28 பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News September 28, 2024

தர்மபுரியில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் தமிழக வானிலை ஆய்வு மையம் இன்று செப்டம்பர் 28 வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தற்போது மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News September 28, 2024

ரூ. 11.67 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனை

image

தர்மபுரி 4 ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 2,145 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகபட்சமாக 1 கிலோ 676 ரூபாய்க்கும், சராசரியாக கிலோ 544 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக கிலோ 304 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று ரூ. 11,67,664 பட்டுக்கூடுகள் விற்பனையானதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.