India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <

தருமபுரி: வீரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தனபால் (58). முன்னாள் ராணுவ வீரரான இவரை, நிலத்தகராறில், 2016ல் இவரது அண்ணன் மகன்களான சேகர் மற்றும் ஸ்ரீதர் இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தனபால் கொடுத்த புகாரின் பெயரில் இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தற்போது தருமபுரி நீதிமன்றம் 2 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.3000 அபராதம் விதித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அரக்கோணத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தருமபுரி அரூரில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், மோகனூர், நாமக்கல், நீலகிரி, திருப்பூரில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.23) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. குணவர்மன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு, (அக்.23) இன்று விவசாயிகள் 15 கிலோ 765.250 பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.629-க்கும், குறைந்தபட்சமாக ரூ.578.92-க்கும், சராசரியாக ரூ.520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மொத்த விற்பனை மதிப்பு ரூ.443022/- என அங்காடி அலுவலர்கள் தெரிவித்தனர்.

தருமபுரி நகர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று அக்.23 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு டார்ச் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் தர்மபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600941391-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தருமபுரி பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு & ஒலி மாசு அளவை கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரியில் வழக்கமாக காற்றின் தர குறியீடு 100 புள்ளியாக இருக்கும், தீபாவளி பட்டாசு வெடிக்கப்பட்டதில் மாசுபாடு அதிகரித்து 120 புள்ளிகளும் வரை அதிகரித்து இருக்க வாய்ப்புள்ளதாக நேற்று (அக்.22) அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள் <
Sorry, no posts matched your criteria.