Dharmapuri

News March 4, 2025

ஆசிரியர் ஜாதி பெயர் சொல்லி திட்டியதாக மாணவி புகார்

image

அழகாபுரியில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி, இலக்கியம்பட்டி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் மாணவியின் தாயார் உயிரிழந்ததால், அவர் ஒரு மாதம் பள்ளிக்கு செல்ல இயலவில்லை. பின்னர் மீண்டும் பள்ளிக்கு சென்றபோது, ஆசிரியர், மாணவியை ஜாதி பெயரை செல்லி திட்டியதாக, இன்று மாணவி, முதன்மை கல்வி அலுவலரிடம், மாவட்ட பாஜக தலைவர் மூலம் புகார் அளித்தார்.

News March 4, 2025

சித்தா, ஆயுர்வேதா படித்தவர்களுக்கு அரசு வேலை

image

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபடியாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் <>ஆன்லைன் வழியாக<<>> விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

News March 4, 2025

தருமபுரியில் எலுமிச்சை பழம் விலை உயர்வு

image

தருமபுரியில் எலுமிச்சை பழம் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று வரத்து சரிவு காரணமாக ஒரு கிலோ ரு.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமங்களில் திருவிழாக்கள் தொடங்கியுள்ளதால் மக்கள், கோவில் நிர்வாகிகள் அதிகளவில் எலுமிச்சை பழம் வாங்கி செல்வதால் விலை மேலும், உயரலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

News March 4, 2025

மார்ச் மாதம் முழுவதும் மின்தடை இல்லை

image

துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில், மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டு மக்களை எச்சரித்து வருகிறது. தற்போது, 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்களின் நலன் கருதி மின்வாரியம் மார்ச் மாதம் முழுவதும் மின்தடை எதுவும் நிகழாது என்று தெரிவித்துள்ளது.

News March 3, 2025

ஆசிரியர்கள் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை 

image

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகாமையில் சாந்தி என்பவர் பள்ளி வளாகத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவரை கன்னத்தில் அடித்து சாதி பெயரை கூறி தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்களான தமிழ்ச்செல்வி, கிருஷ்ணன் ஆகிய இருவரையும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தனர்.

News March 3, 2025

 தர்மபுரி மாவட்டத்தில் 19,336 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

image

தமிழகத்தில் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்குகிறது. இதனை அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் இன்று மார்ச் 03, 83 தேர்வு மையங்களில் 19,336 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை உள்ளிட்ட 3 ஆயிரத்து 500 பேர் பணியாற்றுகின்றனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 3, 2025

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி 

image

பென்னாகரம் பகுதி சேர்ந்த கிரிதரன் ஓட்டுநர் நேற்று முன்தினம் அப் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றபோது புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்ற போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து நேற்று பென்னாகரம் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

News March 2, 2025

பெண்ணுக்கு பாலியல் தொல்லை வி.சி.க. நிர்வாகி கைது

image

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 52). வி.சி.க. நிர்வாகி. இவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று ஞானசேகரனை கைது செய்தனர்

News March 2, 2025

தவெக மாவட்ட செயலாளர் தாபா சிவா கைது

image

பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சுங்க சாவடியை சுற்றுவட்டார பகுதிகளில் செல்லும் மக்களுக்கு அதிக வசூல் செய்வதாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான தொண்டர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர். இதில் கலந்துகொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்து துண்டுகட்டாக சென்றனர்.

News March 2, 2025

போஸ்ட் ஆபிசில் வேலை; நாளையே கடைசி

image

தருமபுரியில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 83 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!