India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரியில் அமைந்திருக்கும் முக்கிய தீர்த்த ஸ்தலம் அனுமான் தீர்த்தம் ஆகும். இந்த அனுமன் தீர்த்தம், இராமாயணத்துடன் தொடர்புள்ள தீர்த்தம் ஆகும். தீர்த்தமலைக்கு வருவோர் கண்டிப்பாக அனுமான் தீர்த்தத்தைக் கண்ட பின் தான் தீர்த்தமலை செல்வர். மேலும் இந்த அனுமன் தீர்த்தமலையானது, நோய் தீர்க்கும் அற்புத மலையாகும். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம், பல வகையான நோய்கள் நீங்குகின்றன. ஷேர் பண்ணுங்க
தருமபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் 7 நிறுவனங்களில் 55 இளைஞர்களுக்கு 12 மாத இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு வயது வரம்பு 21 முதல் 24 ஆண்டுகள் ஆகும். கல்வித்தகுதி ஐ.டி.ஐ. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி ஆகும். மேலும் விபரங்களுக்கு <
ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் <
தர்மபுரி வெண்ணாம்பட்டி ஆயுதப்படை கல்யாண மண்டபம் எதிரே வசித்து வந்தவர் ராஜேந்திரன் (68).இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு, ராஜேந்திரனை தெருநாய் ஒன்று கடித்துள்ளது. அதற்கு அவர் ஊசி போடாமலும், முறையாக சிகிச்சை பெறாமலும் அலட்சியமாக இருந்து விட்டார். இதனால், ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர் நோய்த்தொற்றின் வீரியத்தால் உயிரிழந்தார்.
கம்பைநகர் அடுத்த போளையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகன் நேதாஜி (13), அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடிய போது ஊஞ்சலில் மாட்டி நேதாஜி உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்து வந்த கம்பைநல்லூர் காவல்துறை இவரது இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றது.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S.மகேஸ்வரன்,B.com.BL., அவர்களின் தலைமையில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 79 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு 79 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளின் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் தர்மபுரி விவசாயிகள் தங்கள் நில உடமை பதிவுகளை சரிபார்க்க ஒரு பொன்னான வாய்ப்பு தங்கள் கிராமம் தேடி வருகிறது. இந்த முகாமில் பங்கேற்று தாங்கள் நிலப் பதிவுகளை சரி பார்த்துக் கொள்ளுமாறு வேளாண் அலுவலர் தேவி தெரிவித்துள்ளார்.
அரூர் நகரத்தில் வட்டாச்சியர் (தாசில்தார்) அலுவலகத்தில் ஆதார் திருத்த மையம் செயல்பட்டு வருகிறது அங்கு ஒரு மையம் இருப்பதினால் மக்கள் ஆதார் பெயர், முகவரி, செல் நெம்பர் திருத்தம் செய்ய அதிக கூட்டம் இருப்பதால் இதற்கு அரூர் MLA திரு. வே. சம்பத்குமார் அவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார் இதன் பேரில் அரூரில் இரண்டு ஆதார் மையம் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தர்
தருமபுரி பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் சிக்கியது. இதில் ஓசூர் அலசநத்தம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த இருவருக்கு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.