India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக விவசாயிகள் எளிதில் பணி மேற்கொள்ள வேளாண் இயந்திரமக்கள் துணை இயக்க திட்டத்தின் கீழ் அலைபேசி வழியாக செயல்படுத்த மின் மோட்டார் 40% மானியம் அல்லது அதிகபட்சமாக மானியத்தொகை ரூ.4000 வரை வழங்கப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு; 04342 296132 தொடர்பு கொள்ளலாம் தர்மபுரி கலெக்டர் சாந்தி நேற்று தெரிவித்துள்ளார்.

பென்னாகரம் வட்டம் சின்னப்பள்ளத்தூர் கிராமத்தில் நவம்பர் 27 ஆம் தேதி குடியிருப்பு வீட்டில் பாம்பு இருப்பதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பா.ம.க நிறுவனர் ராமதாசை இழிவாக பேசியதாக முதலமைச்சரை கண்டித்து தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே தடையை மீறி பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கமணி தலைமையில் தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி வெங்கடேஸ்வரர் உட்பட பாமகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 2 எம்.எல்.ஏ உட்பட 241 ஆண்கள் 12 பெண்கள் என மொத்தம் 252 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மீண்டும் துணிப் பையை பயன்படுத்தும் நோக்கில் 10 ரூபாய் செலுத்தி துணிப்பையை வழங்கும் இயந்திரத்தை, நேற்று மாவட்ட ஆட்சியர் சாந்தி துவக்கி வைத்தார். இந்த வாய்ப்பினை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி இன்று பிறந்தநாள் காணும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உதயநிதிக்கு மாபெரும் தமிழ் கனவு புத்தகத்தை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தாா். இதில், திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்ப நலத் துறை சார்பில், உலக நவீன வாசக்டமி (NSV) இருவாரம் அனுசரிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி இரதத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இன்று (நவ 27) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, துணை இயக்குநர் (தொழுநோய்) மரு. புவனேஸ்வரி ஆகியோர் இருந்தனர்.

தருமபுரியில் முதல் அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட பா.ம.க.வினர் 253 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜி.கே. மணி, வெங்கடேஷ்வரன் உட்பட 253 பேரை கைது செய்யப்பட்டனர். இவர்கள் தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு நேற்று(நவ 26) இரவு 8 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் மழை அளவு வழக்கத்தை விட குறைவாக பெய்துள்ளது. இதனால் பயிர் சாகுபடி பாதிக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாவட்டத்தின் ஒரு ஆண்டிற்கான சராசரி மழையளவு 942 மி.மீ. கடந்த சில ஆண்டுகளாக சராசரி மழை அளவு குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 768 மி.மீ.மழை பெய்து இருந்த நிலையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடையும் சூழலில் இதுவரை சுமார் 650 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.

தர்மபுரி, காளப்பனஹள்ளி, காட்டுக்கொட்டாய் கிராமத்தில், இன்று கிணறு ஆழப்படுத்தும் பணியில் கீரியூரை சேர்ந்த பச்சியப்பன் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது மண் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனை வேடிக்கை பார்க்க வந்த விருதானூரை சேர்ந்த முருகம்மாள் என்பவரும் தவறி விழுந்து உயிரிழந்தார். இருவர் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, காரியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தருமபுரியில் இன்று (நவ.25) திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி, பட்டா பெறுதல், சிட்டா பெயர் மாற்றம், வீட்டுமனை பட்டா வழங்குதல், குடும்ப அட்டை வேண்டி, முதியோர் உதவித்தொகை, மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வேண்டி மொத்தம் 627 மனுக்களை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பெற்றுக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.