India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டம் சோகத்தூர் கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலையில் இன்று(ஏப்.5) காலை 6 மணியளவில் எட்டிமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவரின் கார் மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான குழு, தண்ணீரை குழாய் வழியாக பீச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த விபத்தில் காரின் பாதி பகுதி எரிந்து சேதமானது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இந்த நிலையில் இன்று(ஏப்.5) தருமபுரி ஒட்டப்பட்டியில் சௌமியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் அனைவரும் ஆரத்தி எடுத்தும், மாம்பழம் ஏந்தியும் வேட்பாளரை வரவேற்றனர். உடன் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்புடன் வாக்களிப்பதை உறுதிப்படுதுதம் நோக்கில், அரூர் அடுத்த கம்பைநல்லூர் பகுதியில் நேற்று(ஏப்.4) போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அரூர் டிஎஸ்பி ஜெகன்நாதன் தலைமையில், கம்பைநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் முன் துவங்கிய அணிவகுப்பு பஸ் ஸ்டாண்ட், காரிமங்கலம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்றது.
தர்மபுரி பாமக வேட்பாளராக சவுமியா அன்புமணி களமிறக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் எனது அம்மா சௌமியா, சமூக அக்கறை நிறைந்தவர். இதனால் நிறைய விழிப்புணர்வுகளை பெண்களிடம் ஏற்படுத்தி வருபவர் எனது அம்மா. எனவே எனது தாய்க்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்கி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் மகள் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வள்ளலார் திடலில் நேற்று(ஏப்.) மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். சுமார் 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் முன்னாள் படைவீரர்களை சிறப்புக் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட விண்ணப்பம் அளிக்காதவர்கள், தங்களின் விண்ணப்பத்தினை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க கலெக்டர் அறிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணிக்கு தருமபுரி நகர பகுதிகளில், பாமக கட்சி தலைவர் அன்புமணி மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார். இதில் பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், மற்றும் கட்சி நிறுவனர் ஏராளமான கலந்து கொண்டனர்.
பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் இன்று(ஏப்.3) தரும்புரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமகவின் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அன்புமணி இன்று வாக்கு சேகரிக்க உள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் மாதையன்(60). நேற்று(ஏப்.1) இவர் பெரியபள்ளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒற்றை யானை திடீரென தாக்கியதில், அங்கேயே படுகாயம் அடைந்து மாதையன் உயிரிழந்துள்ளார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ஒகேனக்கல் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.