Dharmapuri

News February 3, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

தருமபுரியில் காவல் உட்கோட்ட எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டு இருக்கிறது. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பாக புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

News February 3, 2025

பென்னாகரம் எம்.எல்.ஏ மாணவிக்கு பாராட்டு

image

குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்த, பென்னாகரம் தொகுதி நாதசம்பட்டியை சேர்ந்த சுபிக்ஷா என்ற மாணவிக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News February 3, 2025

ஆஞ்சநேயர் கோயில் வளைவில் அதிகாலை வாகன விபத்து

image

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் வளைவில் அதிகாலை இன்று (பிப்3) கல்லண்டை மீன் எடுத்துக்கொண்டு வந்த கனரக வாகனம் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இதனை அடுத்து அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News February 2, 2025

காவல் ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று பிப்.2 இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தர்மபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

News February 2, 2025

3 பணியாளர்கள் பணியிடை நீக்கம்

image

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் நேற்று மதியம் சத்துணவு உணவு சாப்பிட்ட மாணவியரில் 8 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவிகளை அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் சாந்தம்மாள் சமையல் உதவியாளர் உமாராணி, சந்திரா உள்ளிட்டோர் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது

News February 1, 2025

காவல் ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

தர்மபுரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தர்மபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

News February 1, 2025

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர்

image

தருமபுரி மாவட்டத்தின் ஆட்சியராக நேற்று மாலை தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்து வந்த திரு. சதீஷ் ஐஏஎஸ் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (01.02.2025) தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News February 1, 2025

பட்ஜெட் கூட்டத்தொடரில் தர்மபுரி எம்பி

image

குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய 2025-2026 -ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் நேற்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி, கருணாநிதி கனிமொழி, அருண்நேரு, செல்வகணபதி, கலாநிதி வீராசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News January 31, 2025

காவல் ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

தர்மபுரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தர்மபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

News January 31, 2025

ரோந்து பணி விவரம் வெளியீடு

image

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இன்று ( ஜன.31 ) ரோந்து பணியில் ஈடுபடுவோரின் காவல்துறையினர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!