Dharmapuri

News May 15, 2024

காதல் விவகாரம்? ஒருவர் குத்திக் கொலை

image

நல்லம்பள்ளி, பாகல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளா, இவரது 2 வது கணவர் ஹரிகிருஷ்ணன். இந்நிலையில் நேற்று இவர்களது வீட்டிற்கு வந்த கதிரவன் ஹரியை கத்தியால் குத்தினார். பதிலுக்கு அதே கத்தியால் கதிரவனையும் ஹரி கிருஷ்ணன் வெட்டினார். இதில் ஹரிகிருஷ்ணன் உயிரிழந்தார். மேலும், காயமடைந்த கதிரவன் பரிமளாவின் மகளை காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 15, 2024

வீணாகும் குடிநீர்: பொதுமக்கள் கோரிக்கை

image

மாரண்டஅள்ளி மல்லாபுரம் சாலையில் முன்பு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் 3 மாதங்களாக உடைந்து குடிநீர் வெளியேறி சாலையில் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் முறையிட்டோம் எவ்வித நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

News May 15, 2024

மரம் நடும் பணியினை துவக்கி வைத்த கலெக்டர் 

image

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அஞ்சேஹள்ளி ஊராட்சி, ரங்காபுரம் கிராமத்தில் மரம் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இன்று துவக்கி வைத்து நட்டு வைத்த மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றினார். உடன் வட்டாட்சியர் சுகுமார் உட்பட தொடர்புடைய
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News May 15, 2024

குடியிருப்பில் புகுந்த நாகப்பாம்பு உயிருடன் மீட்பு

image

தர்மபுரி மாவட்டம், தர்மபுரி வட்டம் EB.காலனியில் குடியிருப்பில் 4 அடி நாகப்பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் (போ) பா.வெங்கடேஷ் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையுடன் ஒப்படைத்தனர்.

News May 14, 2024

அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு எம்எல்ஏ பரிசு

image

 தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று நேரில் சென்று மாவட்ட அளவில் அரசு பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவி இரத்தினாதேவிக்கு இனிப்பு வழங்கி, பாராட்டி பரிசு வழங்கினார். மேலும், பள்ளியின் இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும் பாராட்டி பரிசு வழங்கினார்.

News May 14, 2024

தர்மபுரி மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை தர்மபுரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

லாரி மோதி பாய் வியாபாரி பலி

image

தர்மபுரி: நல்லம்பள்ளியைச் சேர்த்தவர் கோவிந்தராஜ்(பாய் வியாபாரி). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் தேக்கல்நாயக்கன்பட்டி – கடத்தூர் சாலையில் நின்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News May 14, 2024

தர்மபுரி : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 19 ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தர்மபுரி மாவட்டம் 19 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 86.89% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.72 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.17 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT:தர்மபுரி 90.49% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) வெளியாகியுள்ளன. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் மாணவர்கள் 87.44% பேரும், மாணவியர் 93.36% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 90.49% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. தர்மபுரி மாவட்டம் 23வது இடத்தை பிடித்துள்ளது.

News May 14, 2024

பெருந்திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணி துறையில் சார்பில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் சாந்தி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி நேரில் சென்று பார்வையிட்டு திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!