India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் முதல்வர் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் விண்ணப்பங்களை பெற்று வரும் ஏப்ரல் 04ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே.மணி, “தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் அமைக்க அரசு முன்வர வேண்டும்” என்றார். அவருக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “தருமபுரியில் சிப்காட் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும்” என்றார். இதன்மூலம் தருமபுரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்
தருமபுரியில் மாா்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பா்வைசா், மேலாளா், கம்ப்யூட்டா் ஆப்ரேட்டா், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணியிடங்களுக்கு ஆள்கள் தேவை என தனியாா் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில் 10,12th மற்றும் பட்ட படிப்பு படித்தவர்கள் நாளை காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளுங்கள், ஷேர் பண்ணுங்கள்.
அரண்மனைபள்ளம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ், இவரது மனைவி ஆனந்தி. குழந்தை பிறந்ததிலிருந்தே ஆனந்திக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆனந்தி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
தருமபுரி என்றதும் நியாபகம் வருவது ஒகேனக்கல் தான். ஒகேனக்கலின் பழைய பெயர் உகுநீர்க்கல் என்பதாகும் கால போக்கில் தான் ஒகேனக்கல் என்று திரிந்து விட்டது. உள்ளூர்,வெளியூர் சுற்றலா பயணிகளுக்கு சுற்றலா என்றதும் முதலில் நியாபகம் வருவது ஒகேனக்கல் அருவி தான். அப்படிபட்ட வரலாற்றை தனக்கென கொண்டுள்ளது இந்த அருவி. இங்கு பரிசல் சவாரி மற்றும் எண்ணெய் குளியல் என்பது தனி சிறப்பு.
தருமபுரியில் உள்ள சென்றாய பெருமாள் கோவில் தமிழகம் முழுவதும் பிரலமான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது ஒரு ஓவல் வடிவ கோட்டையாகும். இந்த கோவில் அதியமான் மற்றும் தகோதூர் வம்சங்களின் பண்டைய தலைநகராக செயல்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றன. 13ஆம் நூற்றாண்டின் கலைப்படைப்பு கோவிலின் உட்புற குழியின் சுவர்களில் வரிசையாக உள்ளது. இதனை காண்பதற்கு ஒரு நல்ல சுற்றுலா பகுதியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க
பென்னாகரம் அருகே உள்ள எமனூர் வனப் பகுதியில் கடந்த மார்ச்.1ஆம் தேதி ஆண் யானை யானை வேட்டையாடப்பட்டு எரித்து, தந்தங்கள் கடத்தப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக ஏமனூர் அடுத்த கொங்கரப்பட்டியை சேர்ந்த தினேஷ், விஜயகுமார், கோவிந்தராஜூ ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் யானையின் 2 தந்தங்கள் சேலம், ஈரோடு, தருமபுரி மாவட்ட எல்லைகளில் உள்ள காரைக்காடு கிராமத்தில் பறிமுதல் செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள், இந்த <
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த பி.தர்மசெல்வனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணியை தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி கூட்டத்தில் பி.தர்மசெல்வன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
அரூர் அடுத்த எலவடை கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவரை கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் திருமணம் நிலையில், ஒரே மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் திருமூர்த்திக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததும், மூன்றாவதாக 17 வயது பெண்ணை திருமணம் செய்ததும் தெரியவந்தது. திருமூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியரிடம் பிரியதர்ஷினி மனு அளித்தார்.
Sorry, no posts matched your criteria.